Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதெல்லாம் சாதாரணம்: காஜலை முத்தமிட்டது பற்றி ஒளிப்பதிவாளர் விளக்கம்
Recommended Video
ஹைதராபாத்: மேடையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது பற்றி ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
கவச்சம் தெலுங்கு பட டீஸர் வெளியீட்டு விழா மேடையில் காஜல் அகர்வாலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு. இதனால் காஜல் அதிர்ச்சி அடைந்தாலும் சிரித்து மழுப்பிவிட்டார்.
சோட்டா காஜலை முத்தமிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
ரசிகர்கள்
பொது இடத்தில் சோட்டா இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதை பார்த்த காஜல் அகர்வாலின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இந்த ஆள் என்ன இப்படி நடந்து கொள்கிறார், காஜலும் ஒன்னும் சொல்லாமல் விட்டுவிட்டாரே என்ற விமர்சனம் எழுந்தது. இது மீ டூ சம்பவம் என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர். பலர் சோட்டா நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சோட்டா
சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சோட்டா நாயுடு. மறைந்த நடிகை சவுந்தர்யாவுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகை காஜல் அகர்வால். காஜல் அகர்வாலுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. எனக்கு அவரை பல ஆண்டுகளாக தெரியும். அவருடன் சேர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ளேன் என்கிறார் சோட்டா.
முத்தம்
என்னை தன் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார் காஜல் அகர்வால். டீஸர் வெளியீட்டு விழா எங்களுக்கு கொண்டாட்ட நேரமாக இருந்தது. அவர் அண்மையில் ஒப்புக் கொண்ட ஒரு படம் பற்றி என்னிடம் தெரிவித்தார். அதனால் அவரை பாராட்டும் விதமாக முத்தம் கொடுத்தேன். இதெல்லாம் சாதாரண விஷயம் என்று சோட்டா தெரிவித்துள்ளார்.
இப்படியா?
டோலிவுட்டில் காஜல் அகர்வாலுக்கு நல்ல பெயர் உள்ளது. ரொம்ப பொறுமையான பொண்ணு என்று பெயர் எடுத்துள்ளார். அதற்காக சோட்டா செய்த செயலை இப்படியா பொறுத்துக் கொள்வது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மீ டு வேகம் எடுத்துள்ள நேரத்தில் சோட்டாவை சும்மாவிடலாமா என்று பலரும் சமூக வலைதளங்களில் குமுறுகிறார்கள்.