twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது நியாயமே இல்லை, அது என்ன ரஜினியை இப்படி கலாய்க்கிறது?

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்தை கலாய்ப்பதில் நியாயமே இல்லை.

    அரசியல் கட்சி துவங்குகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் கட்சி துவங்கவில்லை. மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று ரஜினி தெரிவித்தார்.

    இந்நிலையில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

    கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த ஆர்யா, சயீஷா செய்ற வேலையை பாருங்க கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த ஆர்யா, சயீஷா செய்ற வேலையை பாருங்க

    தேர்தல்

    தேர்தல்

    போட்டியிட்டால் சட்டசபை தேர்தலில் மட்டுமே போட்டியிடுவேன் என்று ஒரு முடிவோடு இருக்கிறார் ரஜினிகாந்த். தனது நோக்கம் சட்டசபை தேர்தல் தான் என்று அவர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். இந்நிலையில் அவரிடம் போய் மக்களவை தேர்தலில் போட்டியிடுவீர்களா, இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கலாமா?

    ரஜினி

    ரஜினி

    ரஜினி தான் கட்சியே துவங்கவில்லையே, அவரிடம் போய் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கலாமா என அதற்குள் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர். ரஜினி போட்டியிட்டால் நேராக ஐ.நா. தேர்தலில் தான் போட்டியிடுவார் என்று சமூக வலைதளங்களில் சிரிக்கிறார்கள்.

    கட்சி

    கட்சி

    ரஜினி தான் ஏதாவது பிரச்சனை குறித்து கேட்டாலே நான் இன்னும் கட்சி துவங்கவில்லை என்கிறார். இல்லை என்றால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்கிறார். அப்படி இருக்கும்போது அவரை அடிக்கடி தொந்தரவு செய்து கலாய்ப்பது தவறு.

    நடிகர்

    நடிகர்

    ரஜினியின் படங்களை பார்த்தே ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள். அதை எல்லாம் பார்த்தும், பார்க்காததும் போன்று இருக்கிறார். அதனால் தற்போது அரசியல் விஷயத்திலும் தைரியமாக கலாய்க்கிறார்கள். எவ்வளவோ சமாளித்துவிட்டார், இதை சமாளிக்க மாட்டாரா?

    English summary
    It is unfair to troll Rajinikanth over politics as he made his stand clear in the very beginning itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X