ராஜமவுலி பட ஹீரோயின் கீர்த்தி இல்லை, வாரிசு நடிகை

By Siva

ஹைதராபாத்: ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர். ஆர். படத்தின் ஹீரோயின் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி 2 படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜாவை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் பிரஸ் மீட் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்பொழுது படத்தின் ஹீரோயின் யார் என்பதை ராஜமவுலி தெரிவித்தார்.

ராஜமவுலி

ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஹீரோயின் பாலிவுட் நடிகை ஆலியா பட் என்று அறிவித்தார் ராஜமவுலி. மேலும் அவரை வரவேற்று ட்வீட்டும் போட்டுள்ளார். ஆல்யா ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

கீர்த்தி

கீர்த்தி

ஆர்.ஆர்.ஆர். படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் ஆலியா தான் ஹீரோயின் என்பது உறுதியாகிவிட்டது. முன்னதாக கால்ஷீட் பிரச்சனையால் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் ஆலியா என்று கூறப்பட்டது.

சமுத்திரக்கனி

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் ஆர்.ஆர். ஆர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியாகும். ஆனால் படத்தை உடனே பார்க்கும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. காத்திருப்போம்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X