ஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா?: சீறும் சமந்தா

By Siva

Recommended Video

முத்த காட்சிக்காக 10 லட்சம் வாங்கின சமந்தா, ராம் சரண்- வீடியோ

சென்னை: ஹீரோ செய்தால் சரி, ஹீரோயின் செய்தால் மட்டும் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை சமந்தா.

ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் சமந்தா, ராம் சரண் தேஜா வரும் முத்தக் காட்சி உள்ளது.

திருமணமான நடிகை எப்படி இவ்வாறு முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று ஆளாளுக்கு சமந்தாவை விமர்சித்துள்ளனர்.

லிப் டூ லிப்

லிப் டூ லிப்

அது வெறும் கன்னத்தில் முத்தம் கொடுப்பது தான், லிப் டூ லிப் ஒன்றும் கிடையாது. இதற்கு போய் பெரிய விஷயம் போன்று பேசுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று கேட்கிறார்கள் என்கிறார் சமந்தா.

நடிகை

நடிகை

திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் யாராவது கேள்வி கேட்பார்களா? அப்படி இருக்கும்போது என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்? நான் பெண் என்பதாலா? என சமந்தா குமுறுகிறார்.

மாமனார்

மாமனார்

ஊரார் தான் விமர்சிக்கிறார்கள். என் குடும்பத்தார் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதிலும் குறிப்பாக என் மாமனார் மிகவும் ஆதரவாக உள்ளார். அதனால் என்னால் தைரியமாக நடிக்க முடிகிறது என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

சேலை

சேலை

நான் நீச்சல் உடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதற்கும் விமர்சனம் எழுந்தது. கடற்கரையில் நீச்சல் உடை அணியாமல் சேலையா கட்ட முடியும் என்று கேட்கிறார் சமந்தா.

புகைப்படம்

புகைப்படம்

மக்களின் கவனத்தை ஈர்க்க நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடவில்லை. நான் எந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று யார் கூற வேண்டும்? நான் திருமணமானவள் என்பதால் கலாய்க்கிறார்கள். நான் எப்படி வாழ வேண்டும் என்று யாரும் சொல்லத் தேவையில்லை. நான் பயப்பட விரும்பவில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X