அரக்கன், ஃபிராடு, கடன்காரன்: கணவரை பிரிந்த பிக் பாஸ் பிரபலம்

By Siva

மும்பை: ஒன்னுமே இல்லாமல் எல்லாமே இருப்பதாக பொய் சொன்ன கணவரை பிரிந்துவிட்டதாக பிக் பாஸ் பிரபலமான சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சோபியா ஹயாத். கன்னியாஸ்திரியாக போன சோபியா ஹயாத் பின்னர் ரோமானியாவை சேர்ந்த இன்டீரியர் டிசைனரான விளாட் ஸ்டானெஸ்குவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார்.

இந்நிலையில் கணவரை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

சோபியா

சோபியா

எல்லாம் முடிந்துவிட்டது. அந்த ஆள் ஒரு அரக்கன், ஃபிராடு. மனது அழுக்காக இருக்கும்போது வெளியே அழகாக இருந்து என்ன பலன் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் சோபியா ஹயாத்.

கடன்

கடன்

பெரிய அரண்மனைகளை டிசைன் செய்யும் இன்டீரியர் டிசைனர் என்று பொய் சொன்னார். உண்மையில் கடன்காரர் அவர். என்னை காதலிப்பதாக பொய் சொன்னார். உண்மை காதல் பொய் சொல்லவோ திருடவோ செய்யாது என்று சோபியா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

செலவு

செலவு

நம் திருமணத்திற்கு நான் தான் செலவு செய்தேன். நம் உடைகள், உணவு எல்லாத்திற்கும் பணம் கொடுத்தேன். நான் வைத்திருந்த அனைத்தையும் பறிக்க விரும்பினாய். நான் பார்த்த போது ஒரு கடையில் வேலை பார்த்தாய். இருப்பினும் நான் காதலித்தேன் என்கிறார் சோபியா

படம்

படம்

வீடோ, பணமோ இல்லாதவரை திருமணம் செய்ய வேண்டாம் என்று அனைவரும் எச்சரித்தும் நான் கேட்கவில்லை. காதல் மீது நம்பிக்கை வைத்தேன். அது பொய் என்று நிரூபித்துவிட்டாய். உன் வாழ்வில் ஒளி ஏற்றினேன், இனி நீ இருளிலேயே இருப்பாய் என்று குமுறியுள்ளார் சோபியா.

பாடம்

பாடம்

உன்னை என் வீடு மற்றும் வாழ்க்கையில் இருந்து வெளியேற்றிவிட்டேன். நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். எனக்கு சமமாக இல்லாத ஒருவருடன் இனி சேர மாட்டேன். ஒரு அரக்கன் ஏஞ்சல் போர்வையில் என்னிடம் வந்தது என்கிறார் சோபியா ஹயாத். சோபியா தான் கர்ப்பமாக இருப்பதாக பிப்ரவரி மாதம் அறிவித்தார். அந்த கரு கலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X