தனுஷ் இல்லாம கூட வடசென்னை எடுத்திருக்க முடியும்.. இயக்குனர் வெற்றிமாறன் பளீர்!
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் எதார்த்தமான படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக உள்ளவர்
தனுஷுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் வெற்றிமாறன் பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தனுஷ் இல்லாமல் கூட வடசென்னை எடுத்திருக்க முடியும் என வெற்றிமாறன் பேசியுள்ளார்.

எதார்த்தமான கதைக்களத்தை
இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெற்றிமாறன் பொல்லாதவன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். தனுஷின் நடிப்பில் மிகவும் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த கூட்டணி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்றது.

சேவல் சண்டை
அதைத்தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து மதுரையில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. அதன்பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி வடசென்னை, அசுரன் என தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது

அலங்காநல்லூரில் படப்பிடிப்பு
இந்த நிலையில் அடுத்ததாக வட சென்னை 2 வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாக தயாராகிக்கொண்டு உள்ளது இதுவரை தனுஷுடன் மட்டும் இணைந்து பணியாற்றி வந்த வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். முழுக்கமுழுக்க சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் படம் பிடிக்கப்பட்டது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விடுதலையை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் அலங்காநல்லூரில் தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டுள்ளது.

தனுஷ் இல்லாமல் வட சென்னை
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பு அசுரன் படத்திற்கு பிறகு அதிக அளவில் மாறி உள்ளது இந்திய அளவில் இவர்களது திரைப்படங்கள் மிக அதிக கவனத்தைப் பெற்றுள்ள நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய வெற்றிமாறன் தனுஷ் இல்லாமல் கூட வட சென்னை எடுத்திருக்க முடியும் என பேசியுள்ளார். வடசென்னை முதலில் சிம்பு நடிக்க இருந்த திரைப்படம். சிம்பு நடிக்க முடியாமல் போனதால் தனுஷ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











