Ajith - ரஜினி, விஜய் ரூட்டை ஃபாலோ செய்கிறாரா அஜித்?.. ஆளே மாறிருக்கார் போல

சென்னை: Ajith (அஜித்) ரஜினிகாந்த், விஜய்யின் ரூட்டை அஜித் ஃபாலோ செய்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். கடைசியாக அவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியானது. வலிமை படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து வெளியான துணிவு படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு ரசிகர்கள் நல்ல ரிசல்ட்டையே கொடுத்தனர்.

விடாமுயற்சி: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் வெளியேறினார். அதன் பிறகு மகிழ் திருமேனி படத்துக்கு உள்ளே வந்தார். கதைக்கான ஒன்லைனை பிடித்துவிட்டாலும் அதனை செதுக்குவதற்கு ரொம்பவே டைம் எடுத்துக்கொண்டார் மகிழ்.

It is reported that Ajith has decided to work with young directors

லொகேஷன் தேர்வு: ஒருவழியாக கதை இறுதி வடிவம் பெற்றது. எனவே விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் லைகா நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை மேலும் அதனை தாமதப்படுத்தியது. இருப்பினும் அஜித்தும், மகிழ் திருமேனியும் லொகேஷன் பார்ப்பதற்காக வெளிநாடு பறந்துவிட்டதாகவும், விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த படம்: விடாமுயற்சி படமே இன்னும் டேக் ஆஃப் ஆகாத சூழலில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது. அதன்படி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் அஜித் படம் செய்யப்போகிறார்; சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

போர் அடிக்கிறது: இதற்கிடையே அஜித் இயக்குநர்களை செலக்ட் செய்யும் முறை போர் அடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதாவது ஒரு இயக்குநருடன் பணியாற்றினால் தொடர்ந்து அவருடனே பணியாற்றுகிறார் அஜித். எத்தனையோ இளம் இயக்குநர்கள் படம் செய்து தங்களது திறமையை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடன் அஜித் இணையவே மறுக்கிறார். ரஜினியே வேறு வேறு இயக்குநர்களோடு பணியாற்றும்போது அஜித்துக்கு என்ன வந்தது என கேள்வியை எழுப்பினர்.

விஜய் ரூட்டை ஃபாலோ செய்யும் அஜித்?: ரஜினி எப்படியோ அதேபோல்தான் விஜய்யும். அவரும் வெவ்வேறு இயக்குநர்களுடன் படம் செய்ய ஆவல் காட்டிவருகிறார் என்றனர் ரசிகர்கள். இந்நிலையில் அஜித் ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம். அதன்படி, சிறுத்தை சிவா படத்தை முடித்த பிறகு பல இயக்குநர்களுடன் பணியாற்ற திட்டம் வைத்திருக்கிறாராம். எனவே அதற்கான பேச்சுவார்த்தையையும் அஜித் இப்போதிலிருந்தே ஆரம்பித்திருக்கிறாராம். இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X