தொடங்கியது KH 233 ப்ரீ புரோடக்‌ஷன்ஸ்... அட்வான்ஸாக வினோத்துக்கு கார் பரிசளித்தாரா கமல்..?

சென்னை: உலகநாயகன் கமல் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள அவரது 233 வது படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இதுகுறித்த செய்திகள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஹெச் வினோத்துக்கு சர்ப்ரைஸ்ஸாக கமல் கார் பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 அஜித் இயக்குநருடன் கமல் கூட்டணி

அஜித் இயக்குநருடன் கமல் கூட்டணி

உலகநாயகன் கமல் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் கோலிவுட்டில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்த கமல், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2க்கு பிறகு அஜித் பட இயக்குநருடன் கமல் கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 தொடங்கியது KH 233 ப்ரீ புரோடக்‌ஷன்ஸ்

தொடங்கியது KH 233 ப்ரீ புரோடக்‌ஷன்ஸ்

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 234வது படம் குறித்து அப்டேட் வெளியானது. இதன்மூலம் நாயகன் படத்துக்குப் பின்னர் மணிரத்னம் - கமல் காம்போ மீண்டும் இணைகிறது. 33 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல், மணிரத்னம் இணையும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு முன்னதாக கமல் தனது 233வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான ப்ரீ புரோடக்‌ஷன்ஸ் வேலைகள் தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹெச் வினோத், அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே திரைக்கதை, மேக்கிங் ஸ்டைலில் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு அஜித்துடன் இணைந்த ஹெச் வினோத், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து 3 படங்களை இயக்கினார். இதில், கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து மாஸ் காட்டியது. இதனையடுத்து கமலின் படத்தை தொடங்க ரெடியாகிவிட்டாராம் ஹெச் வினோத்.

 அட்வான்ஸாக கார் கிஃப்ட்

அட்வான்ஸாக கார் கிஃப்ட்

கமலின் 233வது படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. திரைக்கதையை பைனல் செய்துவிட்ட ஹெச் வினோத் லோக்கேஷன் தேர்வு உள்ளிட்ட மற்ற வேலைகளில் பிஸியாகிவிட்டாராம். துணிவு வெற்றியோடு, KH 233 படத்தின் கதையும் கமலுக்கு பிடித்திருந்ததால் ஹெச் வினோத்துக்கு சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளாராம். அதன்படி பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசு காரை பரிசளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 ஷூட்டிங் முன்பே தரமான சம்பவம்

ஷூட்டிங் முன்பே தரமான சம்பவம்

ஏற்கனவே விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜுக்கு சுமார் 80 லட்சம் மதிப்புள்ள லெக்‌ஷஸ் காரை பரிசளித்தார் கமல். அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்காக பிட்னஸ் கோச்சிங் கொடுத்த ஜிம் மாஸ்டருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் பரிசளித்தார். அதன்பின்னர் கோலிவுட்டில் கார் பரிசளிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஹெச் வினோத் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே அவருக்கு கமல் கார் பரிசு கொடுத்த தகவல் வைரலாகி வருகிறது. ஆனால், இதுகுறித்த உண்மையான அப்டேட்டோ அல்லது போட்டோக்களோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X