H.Vinoth - தாமதப்படுத்துகிறாரா கமல் ஹாசன்?.. வினோத் எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: H.Vinoth (ஹெச்.வினோத்) ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு கமல் ஹாசன் தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

தீரன்: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.

It is reported that Kamal Haasan is delaying acting in H. Vinoths direction

அஜித்துடன்கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படம் கதை ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இயக்கிய துணிவு படம் ஹிட்டானது.

கமல் - ஹெச்.வினோத்: துணிவு படத்தை முடித்த பிறகு வினோத் யாரை இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கமல் ஹாசனுடன் அவர் இணையவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. அது ஏறத்தாழ உறுதியும் செய்யப்பட்டுவிட்டதாகவும்; படத்தின் கதை கமலுக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

எப்போது ஷூட்டிங்: இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி பிக்பாஸ் சீசன் 7ஐ கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருப்பதால் வினோத் படத்தில் நடிக்க தாமதமாகலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

வினோத்தின் முடிவு என்ன?: இதனயடுத்து ஹெச்.வினோத் அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம். அதாவது ஏற்கனவே யோகிபாபுவை மனதில் வைத்து கதை எழுதியிருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது அந்தக் கதையை படமாக்க திட்டமிட்டு விரைவில் ஷூட்டிங்கை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம் இந்தத் தகவலில் பெரும்பாலும் உண்மை இல்லை. ஏனெனில் கமலை வைத்து வினோத் இயக்கும் படத்தில் கமலின் போர்ஷனுக்கான ஷூட்டிங்கிற்கு 15லிருந்து 20 நாட்கள் மட்டுமே போதுமானது. எனவே நிச்சயம் கமல் - வினோத் கூட்டணி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள் ஒரு தரப்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X