LEO: இனிமேல் லெஜண்ட் இல்லை ஏஜென்ட் அண்ணாச்சி... லோகேஷ் இவரையும் விட்டு வைக்கலையா?

காஷ்மீர்: விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்துக்காக விஜய் உட்பட மொத்த லியோ படக்குழுவினரும் காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர்.

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோஸ் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், தி லெஜண்ட் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அண்ணாச்சியும், காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

 காஷ்மீரில் லியோ டீம்

காஷ்மீரில் லியோ டீம்

விஜய்யின் 67வது படமாக உருவாகி வரும் லியோ ஷூட்டிங் காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற டைட்டிலில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடைபெறும் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் படக்குழுவினர் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர்.

 ஏஜென்ட் அண்ணாச்சி

ஏஜென்ட் அண்ணாச்சி

லியோ முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், ஜார்ஜ் மரியான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், டான்ஸர் வசந்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம் லியோ படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தி லிஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் அண்ணாச்சி தான் அது.

 வெளியானது வீடியோ

வெளியானது வீடியோ

சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களில் ஒருவர் லெஜண்ட் அண்ணாச்சி. தனது கடை விளம்பரங்களில் முகம் காட்டி வந்த அண்ணாச்சி, முதன்முறையாக தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்தார். ரசிகர்களிடம் இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அண்ணாச்சியின் தன்னம்பிக்கையை பாராட்டினர். இந்நிலையில், லெஜண்ட் அண்ணாச்சி தற்போது காஷ்மீரில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அந்த வீடியோவில், லியோ டைட்டில் ப்ரோமோவில் வரும் பின்னணி இசை ஒலித்துக்கொண்டிருக்க, செல்ஃபி வீடியோ எடுக்கிறார் அண்ணாச்சி. காட்டேஜில் இருந்து அவர் எடுத்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் லெஜண்ட் அண்ணாச்சியும் லியோ படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறன்றனர். லியோ டீம் இருக்கும் காஷ்மீரில் லெஜண்ட் அண்ணாச்சியும் தங்கியிருப்பது பலருக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குழு எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை.

 விரைவில் அப்டேட் வருமா?

விரைவில் அப்டேட் வருமா?

காஷ்மீரில் இருக்கும் லெஜண்ட் அண்ணாச்சி லியோ டீமை விரைவில் சந்திப்பார் எனவும், அதன்பிறகே அப்டேட் வரும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்துவரும் ரசிகர்கள், இனிமேல் இவர் லெஜண்ட் அண்ணாச்சி இல்லை ஏஜென்ட் அண்ணாச்சி என தெறிக்க விடுகின்றனர். விக்ரம் படத்தில் கமல், சந்தான பாரதி, டான்சர் வசந்தி ஆகியோரின் பாத்திரங்களை, ஏஜென்ட் என்ற கேப்ஷனோடு டைட்டிலில் வெளியிட்டார் லோகேஷ். இப்போது அண்ணாச்சியும் அப்படியே ஏஜென்ட் அண்ணாச்சியாக அவதாரம் எடுப்பார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X