சூர்யா 42 டைட்டில் ப்ரோமோ ரிலீஸ் தேதி இதுதானா... ட்ரெண்டாகும் போஸ்டர்... உண்மை என்ன?
சென்னை: சூர்யாவின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகிறது.
சூர்யா 42 என்ற டைட்டிலில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப் படத்தில் திஷா பதானி, யோகி பாபு நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சூர்யா - சிவா காம்போ
சூர்யா நடிப்பில் கடைசியாக ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்கள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால், அந்தப் படம் பாதியிலேயே ட்ராப் ஆனது. அதனைத் தொடர்ந்து சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் அவர் நடிக்க தொடங்கினார். இதனிடையே, விக்ரம் படத்தில் கமலுக்காக ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார்.

டைட்டில் க்ளிம்ப்ஸ்
கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபுவும் நடித்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சூர்யா 42 டைட்டில் க்ளிம்ப்ஸ் வரும் 14ம் தேதி வெளியாவதாக டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ரசிகர்கள் குழப்பம்
சூர்யா 42 டைட்டில் க்ளிம்ப்ஸ் மார்ச் 14ம் தேதி வெளியாகிறது என்ற போஸ்டரை ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா உட்பட யாரும் இதுபற்றி அப்டேட்டை வெளியிடவில்லை. ஆனால், தற்போது வைரலாகும் போஸ்டர், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இன்ஸ்டா ஸ்டோரியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

விரைவில் அபிஸியல் அப்டேட்
இந்நிலையில், விரைவில் சூர்யா 42 அப்டேட்டை படக்குழுவே வெளியிடும் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக இந்தப் படத்திற்காக சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. சூர்யா 42 திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











