அதே 450 கோடி பட்ஜெட்... ஜெயம் ரவிக்கு பதிலாக சுந்தர் சி டிக் செய்த ஹீரோ... கரையேறுமா சங்கமித்ரா?

சென்னை: காமெடியான படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இயக்குநர் சுந்தர் சி.

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக காஃபி வித் காதல் திரைப்படம் நவ.4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி, சந்தானம் நடிக்கும் அரண்மனை 4ம் பாகத்தை இயக்கவுள்ளார்.

இதனிடையே சுந்தர் சி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக வேறு ஹீரோ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விடாமல் துரத்தும் சங்கமித்ரா

விடாமல் துரத்தும் சங்கமித்ரா

தயாரிப்பாளர்களின் இயக்குநர் என பெயரெடுத்த சுந்தர் சி, அடுத்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கவுள்ளார். விஜய் சேதுபதி, சந்தானம் நடிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கமித்ரா என்ற பிரம்மாண்டமான படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்றாலும் சங்கமித்ரா கனவில் சுந்தர் சி தீவிரமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

 ஜெயம் ரவி விலகல்

ஜெயம் ரவி விலகல்

தேனான்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் லீடிங் கேரக்டரில் நடிக்க இருந்தனர். அதேபோல் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனிடையே ஜெயம் ரவியும் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து முடித்துவிட்டார். இந்நிலையில், சங்கமித்ரா படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சுந்தர் சியின் அடுத்த சாய்ஸ்

சுந்தர் சியின் அடுத்த சாய்ஸ்

சங்கமித்ராவில் இருந்து முதல் ஆளாக ஸ்ருதி ஹாசன் விடை பெற்றார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் இந்தப் படத்தில் இருந்து விலகுவதால் சங்கமித்ரா டிராப் ஆகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது ஜெயம் ரவிக்கு பதிலாக விஷாலை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளாராம். இந்தக் கூட்டணி ஏற்கனவே ஆம்பள, மதகஜ ராஜா, ஆக்‌ஷன் படங்களில் இணைந்துள்ளது. அதனால் விஷால் - ஆர்யா காம்போவில் சங்கமித்ராவை இயக்க சுந்தர் சி ப்ளான் செய்துள்ளாராம்.

 450 கோடி பட்ஜெட்?

450 கோடி பட்ஜெட்?

சங்கமித்ராவின் தயாரிப்பு உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸிடம் இருந்து லைகா வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முதலில் 300 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 450 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சங்கமித்ரா படம் கைவிடப்பட்டதாகவே சொல்லப்பட்டது. ஆனால், சுந்தர் சி கண்டிப்பாக அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளதாகவும், அதற்கான வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருப்பதாகவ்ம் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக இப்போது ஜெயம் ரவிக்கு பதிலாக விஷால் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல், சங்கமித்ரா மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X