தளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு காரணமாக பிகில் படத்தில் தனது மகள் நியாத்தி நடிக்க முடியாமல் போனதாக நடிகை தேவதர்ஷினி வருத்தத்துடன் கூறியுள்ளார். ஒரு செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தேவதர்ஷினி தெரிவித்துள்ளார்.

தேவதர்ஷினி தமிழ் சினிமாவின் ஒரு கொண்டாடப்படாத நாயகி என்றே கூறலாம். டிவி சீரியல் மர்ம தேசம் துவங்கி தற்போது 96 சினிமா வரை பல திரைப்படங்கள், டிவி சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவருக்கு பார்த்திபன் கனவு படத்துக்காக சினிமா கலைஞர்களுக்கு தரப்படும் தமிழ்நாடு மாநில விருது சிறந்த நகைச்சுவை பாத்திரத்தில் நடித்ததற்கு கொடுக்கப்பட்டது.

It is sad that Niyathi Kadambi was unable to act in the Bigil Film-Devadarshini

தற்போது தேவதர்ஷினி பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய்க்கு அக்காவாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது எந்த அளவுக்கு உண்மை என்பது, படம் வெளியானவுடன் தான் நமக்கு தெரியும். ஏனெனில் தேவதர்ஷினி மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் எடிட்டிங்கில் அவர் நடித்த காட்சி நீக்கப்பட்டது. ஆனால் இம்முறை அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் உள்ளது என இசை வெளியீட்டின் போதே தெரிந்துவிட்டது.

தேவதர்ஷினி பிகில் படத்திற்காக ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விசயங்களை பகிரந்துள்ளார். அதாவது, தேவதர்ஷினி மகள் நியாத்தி பிகில் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு அந்த சமயத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வந்ததால் அவரால் படத்தில் நடிக்க முடியாமல் போனது, தனக்கு வருத்தம் அளித்தது என்று கூறியிருந்தார்.

ஆனால் சூட்டிங்கின் போது தன் மகள் பிகில் பட செட்டுக்கு வந்து விஜய்யுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டாராம். ஆனால் இயக்குநர் அட்லி தடுத்து விட்டதாகவும், பின்பு தளபதி விஜய் சூட்டிங்கின் போது தேவதர்ஷினியிடம் அவள் 96 படத்தில் நடித்தது குறித்து கேட்கும்போது தேவதர்ஷினி தன் மகளை அழைத்து விஜய்க்கு அறிமுகம் செய்தாராம்.

அப்பொழுது தேவதர்ஷினி மகள் நியாத்தி விஜய்யுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அதனை பட ரிலீஸுக்கு பின்னர், தான் வெளியிடுவதாக தேவதர்ஷினி கூறியுள்ளார். பிகில் படத்தில் தேவர்ஷினிக்கு நயன்தாரா, யோகி பாபு, கதிர் ஆகியோருடன் முக்கியமான காட்சிகள் இருப்பதாக கூறினார். ஜாக்கி ஜெராஃப்புடன் நடிக்க முடியாதது தனக்கு வருத்தம் என்றும் கூறினார்.

தற்போது தேவதர்ஷினி தமிழில் பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் மார்கெட் ராஜா படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இந்தியில் ஒரு இணைய தொடரிலும் நடித்து வருகிறார். அதில் அவருக்கு முக்கால்வாசி ஆங்கிலத்தில் தான் வசனம் என்று பேட்டியில் தெரிவித்து இருந்தார். பேமிலி மேன் எனும் இனைய தொடரின் இரண்டாம் பாகத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த ஆவ் எனும் தெலுங்கு படத்தில் மாறுபட்டு வில்லியாக நடித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X