Vidaamuyarchi - விடாமுயற்சிக்கு அஜித்தால் வந்த புது சிக்கல்?.. என்ன தினுசு தினுசா வருது..

சென்னை: Vidaamuyarchi Update (விடாமுயற்சி அப்டேட்) விடாமுயற்சி படத்துக்கு அஜித் வழியாக புதிய சிக்கல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

It is said that a new problem has come through Ajith for the film Vidaamuyarchi

பைக் டூர்: படம் குறித்த அப்டேட் கடைசியாக மே 1ஆம் தேதி வெளியானது. அதோடு சரி அதற்கு பிறகு அஜித் டூர் செல்லும் அப்டேட்டுகள்தான் வெளியாகின. இதனால் வலிமை பட அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தனரோ ரசிகர்கள் அதேபோல் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் ஜாலியாக சுற்ற ஆரம்பித்தார்.

விடாமுயற்சி ஷூட்டிங்: இதனையடுத்து லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன் காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போயிருப்பதாக கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனியும் திரைக்கதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அந்த கேப்பை பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்தார்.

ஷூட்டிங் ஆரம்பித்தது: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடத்தவும் மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறாராம்.

மிலன் மரணம்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவருக்கு பதிலாக அவரது மகன் கலை இயக்கத்தை கவனிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

புது சிக்கல்: படம் தொடங்குவதற்கு ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் எந்தக் காரணத்தை கொண்டும் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்துக்கு அஜித் வழியாக புதிய சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அஜர்பைஜான் நாட்டின் க்ளைமேட் அஜித் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை என்றும் அதன் காரணமாக தினமும் ஷூட்டிங்கிற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறார். இதனால் ஒருநாளுக்கான ஷூட்டிங் முடிப்பதற்கே தாமதமாவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X