Ajith - திமுகவினரால் அஜித்துக்கு வந்த கொலை மிரட்டல்?..காப்பாற்றிய ரஜினிகாந்த்.. அந்தணன் பகிர்ந்த சீக்ரெட்
சென்னை: Ajith (அஜித்) அஜித்துக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் அதிலிருந்து ரஜினிகாந்த்தான் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
அஜித்குமார் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். படங்கள் ஹிட்டடித்தாலும், தோல்வியடைந்தாலும் அவருக்கென்ற ரசிகர் கூட்டம் அப்படியேத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பேட்டி கொடுப்பது, படங்களின் ப்ரோமோஷனில் கலந்துகொள்வது என வெளியில் தலையை எப்போதும் காண்பிக்கமாட்டார். அவரைப் பார்க்க வேண்டுமென்றால் அவரது படம் ரிலீஸாகும்போதுதான் பார்க்க முடியும்.

விடாமுயற்சி: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனடு 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அதை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஷூட்டிங்கே இல்லை: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படம் குறித்து வரவில்லை. அஜித்தோ பைக்கில் உலகத்தை சுற்றிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிட்டுவிட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் தீயாக பரவிக்கொண்டிருகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அஜித்னா யாரு?: ஒருபக்கம் விஜய்யின் லியோ, மறுபக்கம் ரஜினியின் ஜெயிலர் அதுமட்டுமின்றி அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தால் விஜய்யும், ரஜினியும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். ஆனால் படமே நடிக்காத அஜித் கடந்த வாரம் ட்ரெண்டிங்கில் வந்தார். அதற்கு காரணம், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டியில் அஜித்னா யாரு? தலயா என கேட்டார். அதில் அஜித்னா யாரு என்று அவர் கேட்பதை மட்டும் கட் செய்து இணையத்தில் பரப்பி அஜித் ரசிகர்கள் துரைமுருகனை விமர்சிக்கத் தொடங்கினர். மேலும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் விமர்சித்தனர்.

கொலை மிரட்டல்: இந்நிலையில் அஜித்துக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் அதிலிருந்து ரஜினிகாந்தான் காப்பாற்றினார் என்றும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எங்களை மிரட்டுகிறார்கள் என்று அவரை வைத்துக்கொண்டே தைரியமாக பேசிவிட்டார் அஜித்குமார். அது அப்போது பெரிய பிரச்னையாக மாறியது. கோடிக்கணக்கானவர்கள் தொண்டர்களாக இருக்கும் கட்சி திமுக.
அஜித் அப்படி பேசியதை அடுத்து பலரும் அஜித்தை மிரட்டினர். உன்னை காலி பண்ணிடுவோம், வீடு இருக்காது என்றெல்லாம் மிரட்டினார்கள். அப்போது ரஜினிகாந்த்தான் கருணாநிதியிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி மறுநாளே சந்திக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகுதான் கட்சிக்காரர்கள் அமைதியாகிவிட்டார்கள்" என்றார். முன்னதாக பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜித், இதுமாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சொல்லி எங்களை மிரட்டுகிறார்கள் ஐயா என கருணாநிதியிடம் நேரடியாக கூறியதும் அதற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











