GV Prakash - ஜிவி பிரகாஷுக்கு அடித்த ஜாக்பாட்.. அவரை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் இவரா?

சென்னை: G.V.Prakash New Movie (ஜிவி பிரகாஷின் புதிய படம்) ஜிவி பிரகாஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். வெயில் படம் வெயிட்டேஜான கதை என்பதால் அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

It is said that GV Prakash will be acting in a new film directed by Ram

முன்னணி இசையமைப்பாளர்: வெயில் படம் கொடுத்த வெற்றியால் ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மேற்கொண்டு அடையாளப்பட்டார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்று குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அந்த பிரபல்யத்தை விட ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரபல்யம் அவரிடன் விரைவிலேயே வந்து சேர்ந்தது.

தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நடிப்பில் கவனம்: இதற்கிடையே அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படஙக்ள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது.

அடுத்த படம்: அவரது நடிப்பில் கடைசியாக அடியே படம் வெளியானது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இருந்தாலும் ஜிவியின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி இருந்தது. இந்த சூழலில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது தமிழில் முக்கியமான இயக்குநராக இருக்கும் ராம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்திலும் அவர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுராக் காஷ்யப் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X