அக்ஷராவை தனுஷுக்கு ஜோடியாக்கியதே ஸ்ருதிதானாமே!!

By Shankar

தங்கை அக்ஷராவை தனுஷுக்கு ஜோடியாக்கியதே ஸ்ருதிஹாஸன்தான் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் வெளியாகி, கொஞ்ச நாள் அமைதியாக இருந்த தனுஷ் - ஸ்ருதி கிசுகிசுக்களை திரும்ப கிளப்பிவிட்டுள்ளது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் முதலில் ஒப்பந்தமானவர் அமலா பால். ஆனால் அவர் திடீரென நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் ஸ்ருதிஹாஸனை ஜோடியாக்கினார் ஐஸ்வர்யா.

கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

தனுஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி படத்தில் மட்டுமல்ல, படத்துக்கு வெளியிலும் பேசப்படும் விஷயமாகிவிட்டது. இருவரைப் பற்றியும் ஏக கிசுகிசுக்கள். ஸ்ருதிக்காக தனுஷ் மும்பையில் தனி வீடு பார்த்துக் கொடுத்துவிட்டார், இருவரும் ஒன்றாக வசிக்கிறார்கள் எனும் அளவுக்கு.

மறுப்பு

மறுப்பு

ஆனால் அதையெல்லாம் மறுத்த தனுஷ், மும்பையில் தாம் ஸ்ருதியை சந்திக்கவே இல்லை என்றார். அதன் பிறகு இருவர் பற்றிய பரபரப்பான சமாச்சாரங்கள் எதுவும் இல்லாமலிருந்தது மீடியாவில்.

பால்கி இயக்கத்தில்

பால்கி இயக்கத்தில்

இப்போது பால்கி இயக்கத்தில் உருவாகும் புதிய இந்திப் படத்தில் நடிக்கிறார் தனுஷ். அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

அக்ஷரா ஜோடி

அக்ஷரா ஜோடி

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பவர் அக்ஷரா ஹாஸன். ஸ்ருதியின் தங்கை. இந்த ஜோடி பல விஷயங்களில் பரபரப்பாக பேசப்படும் ஜோடியாகிவிட்டது.

முதல் படம்

முதல் படம்

ஸ்ருதியைப் பொருத்தவரை தமிழில் அவர் நடித்த முதல் படம் 3. முதல் ஹீரோ தனுஷ். அதேபோல தங்கை அக்ஷராவுக்கும் முதல் படம், முதல் ஹீரோ தனுஷ்தான்.

சிபாரிசு பண்ணதே ஸ்ருதிதான்

சிபாரிசு பண்ணதே ஸ்ருதிதான்

இந்தப் படத்தில் முதலில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் ஸ்ருதிஹாஸன்தானாம். ஆனால் ஏற்கெனவே இருவர் பற்றியும் தாறுமாறான செய்திகள் வந்ததால், அக்ஷராவை ஜோடியாக்குமாறு சிபாரிசு செய்ததே ஸ்ருதி ஹாஸன்தானாம்.

மீண்டும் கிளம்பிய கிசுகிசு

மீண்டும் கிளம்பிய கிசுகிசு

ஆனால் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக, இந்த சிபாரிசு மேலும் புதிய கிசுகிசுகளுக்கு வழிவகுத்துள்ளது. ஸ்ருதி - தனுஷ் குறித்து மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X