ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம்: மாஸ் தலைப்பு வெளியிட்ட விஜய்
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ப்ரியதர்ஷினி நித்யா மேனனை வைத்து அயர்ன் லேடி என்ற பெயரில் எடுக்கிறார். அவர் தலைப்பு, ஃபர்ஸட் லுக் போஸ்டரை எல்லாம் வெளியிட்டுவிட்டார்.
ஏ.எல். விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்குகிறார்.
ஜெயலலிதா
ஏ. எல். விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று பெயர் வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.

ராஜேந்திர பிரசாத்
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தலைவி வெளியிடப்படும். விஷ்ணு இந்துரி தயாரிக்கும் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் மேற்பார்வையாளராக இயக்குநர் ராஜமவுலியின் தந்தை ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்
படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜி.வி. பிரகாஷ், விஜய் கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும். விஜய் படத்தில் யார் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

தீபக்
பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் வாழ்க்கைய படமாக்க விட மாட்டோம் என்று அவரின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைவி படக்குழு தீபக்கிடம் அனுமதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











