யார் கிட்ட வேணும்னாலும் வச்சுக்கலாம் ஆனால் விஜய் ரசிகாஸிடம் மட்டும் கூடாது #Thalapathy63UpdateDay

By Siva

சென்னை: விஜய் ரசிகர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள். அதற்காக அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்து வரும் படம் தளபதி 63. அட்லி எந்த அப்டேட்டும் கொடுக்காமல் அவர் பாட்டுக்கு விஜய்யை வைத்து காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அப்டேட் எதுவும் கிடைக்காமல் விஜய் ரசிகர்கள் பாவம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

அப்டேட்

அப்டேட்

தளபதி 63 படம் குறித்து ஏதாவது அப்டேட் குடுங்க அக்கா என்று அர்ச்சனா கல்பாத்தியிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்கள் விஜய் ரசிகர்கள். அவரோ சரியான நேரத்தில் அப்டேட் வரும் என்று மட்டும் தெரிவித்தார். ஆக, அப்டேட் எதுவும் இல்லை போய் வேலை பாருங்க என்பதை தான் அர்ச்சு அக்கா இப்படி சொல்கிறார்கள் என்று தளபதி ரசிகர்கள் நொந்து போயினர்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

நேற்று கூட அர்ச்சனாவிடம் தளபதி 63 அப்டேட் கேட்டும் கிடைக்கவில்லை. இது சரிபட்டு வராது என்று முடிவு செய்த விஜய் ரசிகர்கள் #WeWantT63ThiruvizhaUpdate என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்யத் துவங்கிவிட்டனர். ட்விட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வதில் விஜய் ரசிகர்கள் வல்லவர்கள். இந்நிலையில் நேற்று அவர்கள் தொடர்ந்து ட்வீட் செய்ய #WeWantT63ThiruvizhaUpdate என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டானது.

ஏமாற்றம்

நேற்று மாலை 6 மணிக்கு அப்டேட் ஏதாவது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் வழக்கம் போன்று அப்டேட் இல்லை. பரவாயில்லை, நாளை அப்டேட் வரும் என்று மனதை தேற்றிக் கொண்டு தூங்கச் சென்றனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 அப்டேட் வெளியிட்டுள்ளனர். ஆக, நினைத்ததை சாதித்துவிட்டனர் விஜய் ரசிகர்கள். அப்டேட் கிடைக்காத கடுப்பில் அர்ச்சனா கழுத்தில் கத்தி வைப்பது போன்ற போட்டோவை நேற்று வெளியிட்ட ரசிகர்கள் இன்றோ அர்ச்சுமா நீ நல்லா இருக்கணும்மா என்று வாழ்த்துகிறார்கள்.

டிரெண்டிங்

அப்டேட் கேட்டே ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கவிட்டவர்கள் அப்டேட் கிடைக்கப் போகிறது என்பது தெரிந்த பிறகு சும்மா இருப்பார்களா என்ன?. #Thalapathy63UpdateDay என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாக்கவிட்டுள்ளனர். ஆனால் இன்று மாலை 6 மணிக்கு வெளியான அப்டேட் திருப்தி அளிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X