twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி.... தங்க ஊசியைக் கொண்டு பல் குத்திய ரஞ்சித்!

    |

    கபாலியில் ரஜினி என்ற தங்க ஊசியை பல் குத்தப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

    படம் பார்க்க வருபவர்கள் அதிகம் எதிர்பார்த்து வராதீர்கள். ரஜினி படமாக இருக்கும் என எதிர்பார்க்காதீர்கள். நேற்றிலிருந்தே வரும் பதில்கள் இப்படித்தான் இருக்கின்றன. ஆனால் எதிர்பார்க்காமல் வருவதற்கு இது என்ன

    விமல் படமா?

    விமல் படமா?

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டு எதிர்பார்க்காதீர்கள் என ஏன் அவர்களை மாற்ற முயற்சிக்கிறீர்கள்? இந்த எதிர்பார்ப்பு எல்லாம் நீங்கள் உருவாக்கியது தானே?

    ஃபர்ஸ்ட் லுக் முதல் டீஸர், மேக்கிங், தியேட்டர் எண்ணிக்கை, விமான விளம்பரம் என்று புரமோஷன் செய்யும்போது நீங்கள் இந்த வார்த்தைகளைச் சொல்லவே இல்லையே?

    குடும்ப ரசிகர்கள் எங்கே?

    குடும்ப ரசிகர்கள் எங்கே?

    ரஜினி ரசிகர்களில் எப்போதுமே குழந்தைகள் தான் அதிகம். அந்த கள்ளங் கபடம் இல்லாத சிரிப்பை எந்த குழந்தையாக இருந்தாலும் ரசித்தே தீரும். மூன்று தலைமுறைகளைத் தாண்டி இன்றும் கூட குழந்தைகள் ரஜினியை ரசிக்கிறார்கள். ஆனால் அவர்களைக் கருத்திலேயே எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை உருவாக்கினால்

    எப்படி? ஒரு குழந்தையை மகிழ்வித்தால் அந்த குடும்பத்தையே மகிழ்வித்தது போல...

    ரஞ்சித்தின் பலவீனமான திரைக்கதை

    ரஞ்சித்தின் பலவீனமான திரைக்கதை

    கதையில் எந்த புதிய விஷயமும் இல்லை. அட்லீஸ்ட் திரைக்கதையிலாவது எதாவது ட்விஸ்ட் வைத்திருப்பார் ரஞ்சித் என காத்திருந்தால் கடைசி வரை சவ சவ என்றே இழுக்கிறார். எந்த ஒரு இயக்குநருக்குமே இரண்டு படங்களுக்கு பின்னர் வறட்சி ஏற்படும். அப்போது சரியான எழுத்தாளர்களுடன் கைகோர்க்க வேண்டும். அப்படி ஒரு

    வறட்சி ஏற்படும் சமயத்தில் ரஞ்சித்துக்கு ரஜினி படம் பண்ண வாய்ப்பு கிடைத்ததுதான் எல்லோருடைய துரதிர்ஷ்டமும்.

    ராதிகா ஆப்தேவா கமலா காமேஷா?

    ராதிகா ஆப்தேவா கமலா காமேஷா?

    படத்தில் சில காட்சிகளே வந்தாலும் முக்கிய கதாபாத்திரமே குமுதவள்ளி தான். ஆனால் அந்த கேரக்டருக்கு தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ராதிகா ஆப்தேவை தேர்ந்தெடுத்தது தவறு. நன்றாக நடிக்க தெரிந்த ஒரு முன்னணி நடிகையை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஏதோ கமலா காமேஷை பார்ப்பது போலவே இருக்கிறது.

    ஓவர் டோஸான புரமோஷன்

    ஓவர் டோஸான புரமோஷன்

    இந்தியாவிலேயே எந்த படத்துக்கும் இப்படி ஒரு புரமோஷன் பண்ணியதே இல்லை என்னும் அளவுக்கு இருந்தது புரமோஷன். எல்லாம் படத்துக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனங்களின் கைங்கர்யம். அந்த எதிர்பார்ப்பை ஐம்பது சதவீதம் பூர்த்தி செய்திருந்தாலே படம் வெற்றியடந்திருக்கும். ஆனால் கபாலி காய்ச்சலில் இருந்த

    ரசிகனுக்கு நன்றாக நனைக்கப்பட்ட ஈரப் போர்வையைப் போர்த்தி விட்டால் என்ன செய்வான் ரசிகன்?

    மாஸ் எங்கே?

    மாஸ் எங்கே?

    ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்தே இதை மாஸ் படம் என்றே கிளப்பிவிட்டார்கள். ஆனால் படத்தின் ஆரம்ப காட்சியைத் தவிர வேறு எங்குமே மாஸை காணவில்லை. இது ஒரு கிளாஸ் படம் என்று சொல்லியிருந்தாலே போதும்.

    மனதுக்கு ஒட்டாத மலேசிய கதை

    மனதுக்கு ஒட்டாத மலேசிய கதை

    ரஜினிக்கான கதைக்களம் எப்போதுமே அவரது ரசிகனுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் மலேசிய பிரச்னைக்காக போராடும் ரஜினியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தமிழனுக்காகவே இருந்தாலும்.

    தங்க ஊசி ஒன்று கையில் கிடைத்தவுடன் அதனை காட்டியே உலக அளவில் காசு பார்க்கும் ஆசையில் பெரிய எதிர்பார்ப்பை திட்டமிட்டு உருவாக்கிவிட்டார்கள். கடைசியில் அந்த தங்க ஊசியை பல் குத்துவதற்காக ரஞ்சித் பயன்படுத்திக் கொண்டது தான் பரிதாபம்!

    English summary
    Why Rajinikanth's Kabali director Ranjith fails to grab repeated audiences? Here are few reasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X