பகத் பாசில் கூட நடிக்கிறது ரொம்ப சவாலாக இருக்கப் போகுது.. நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: நடிகர் உதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார்

அடுத்ததாக பரியேறும் பெருமாள் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் நேர்காணலில் பேசியே உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் கூட நடக்க போறது ரொம்ப சவாலா இருக்கப் போகுது என வெளிப்படையாக பேசியுள்ளார்.

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து மிகப் பிரபலமான நடிகராக உள்ள உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். கனா கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் தற்போது நெஞ்சுக்கு நீதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. நெஞ்சுக்கு நீதி ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆர்டிகல் 15 படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ்

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ்

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் இயக்குனராக உள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார் . இயக்குனர் மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் ராவான கதையில் உருவாகி வருகிறது மேலும் இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன்

மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் பார்த்து பார்த்து இயக்கி வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் உதய நிதி ஸ்டாலின் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளதாவது பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படங்களைப் பார்த்து அவரது நடிப்பை பிரமித்து போய் உள்ளேன். இது பொழுது மாமன்னன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளேன்.

ரொம்ப சவாலாக இருக்கப் போகுது

ரொம்ப சவாலாக இருக்கப் போகுது

மாமன்னனின் எடுக்கவேண்டிய காட்சிகள் கொஞ்சம் கொஞ்சம் தான் எடுக்கப்பட்டுள்ளது . விரைவில் எனக்கும் பகத் பாசிலுக்கும் இடையே இடையே உள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளது . பவகாத் வாசல் ஒரு அற்புதமான நடிகர் அவர் கூட நடிக்கிறது ரொம்ப சவாலாக இருக்கப் போகுது என அந்த நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X