வெற்றிமாறன் மாதிரி என்னால படம் எடுக்க முடியாது... பிரம்மாண்ட இயக்குனர்!

சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் எஸ் எஸ் ராஜமெளலி

ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் அளவிற்கு பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பை உலகறிய இந்திய சினிமாவிற்கு கொடுத்தவர்

இப்பொழுது ஆர்ஆர்ஆர் என்ற மற்றுமொரு பிரமாண்ட படத்தை இயக்கியுள்ள எஸ்எஸ் ராஜமெளலி வெற்றிமாறன் மாதிரி என்னால படம் எடுக்க முடியாது என மிக ஓபனாக பேசியுள்ளார்

பிரம்மாண்ட படங்கள்

பிரம்மாண்ட படங்கள்

வசூலில் அதிரடியாக சக்கை போடு போட்ட பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி. இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வசூலை வாரி குவித்துள்ளது. அந்த வகையில் எஸ்எஸ் ராஜமெளலி பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தவர். ஹாலிவுட் தரத்தில் பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு இந்திய சினிமாவின் தரத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்திய பாகுபலி திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பட்டையை கிளப்பியது

தடைகளைத் தாண்டி

தடைகளைத் தாண்டி

இந்த நிலையில் மற்றுமொரு சரித்திர பின்னணியில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆர் ஆர் ஆர் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒருவழியாக மார்ச் 24ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் தடைகளைத் தாண்டி வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இரண்டு முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.

அசுரன் மிகவும் பிடித்திருந்தது

அசுரன் மிகவும் பிடித்திருந்தது

தெலுங்கை தொடர்ந்து பல மொழிகளிலும் ராஜமெளலி மிகப் பிரபலம் அடைந்து வரும் நிலையில் தமிழிலும் மிக விரைவிலேயே படம் ஒன்றை இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் பட ப்ரமோஷனில் கலந்துகொண்ட எஸ்எஸ் ராஜமெளலி சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அசுரன் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறியுள்ளார்.

வெற்றிமாறன் மாதிரி படம்

வெற்றிமாறன் மாதிரி படம்

மேலும் வெற்றிமாறனின் மேக்கிங் ஸ்டைல் ராவான கதைகளம் என அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவும் இன்ட்ரஸ்டிங்காக உள்ளது. வெற்றிமாறன் போல படங்கள் இயக்குவது கொஞ்சம் கஷ்டம் என பேசி உள்ளார் மேலும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம் நீங்கள் எந்த தமிழ் இயக்குனருடன் பணியாற்ற விருப்பப்படுகிறார்கள் என்று கேட்டதற்கு இருவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. அவருடைய மேக்கிங் ஸ்டைல் எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது என இருவரும் ஒரே மாதிரியான பதிலை அளித்துள்ளனர். எனவே மிக விரைவிலேயே ராஜமெளலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை தமிழ் சினிமாவில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X