ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு கண்டிப்பா கார்த்தி வேணும்... கார்த்தி இல்லாம படம் நகராது.. இயக்குனர் செல்வராகவன்
சென்னை : இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாஸ்டர் பீஸாக ரசிகர்களால் என்றும் கொண்டாடப்படுகிறது
அந்த வகையில் சோழ தேசத்தை பற்றி இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் இன்றும் ரசிகர்களால் பிரமிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த படமாக தமிழ் சினிமாவில் உள்ளது
ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டுக்கு கண்டிப்பாக கார்த்தி வேண்டும் என செல்வராகவன் கூறியுள்ளார்.

ஆண்டுகள் கழித்து கொண்டாடப்படும்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிக வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்பட வருகிறது. குறிப்பாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரிலீசாகும்போது சரிவர வரவேற்பு பெறவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

பாகுபலி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை
கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். எந்த ஒரு நவீன டெக்னாலஜியும் இல்லாத காலத்திலேயே பாகுபலி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை எடுத்துக் காட்டியவர் செல்வராகவன். தமிழ் சோழ தேசத்தை பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி லீட் ரோலில் நடித்திருப்பார்.

பெஞ்ச்மார்க் ஆயிரத்தில் ஒருவன்
மேலும் ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷின் இசையில் வெளியான இந்த திரைப்படம் ரிலீசான போது ரசிகர்கள் அந்த அளவுக்கு கொண்டாடவில்லை என்றாலும் பல ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் சினிமாவின் பெஞ்ச்மார்க் ஆயிரத்தில் ஒருவன் தான் என ஒவ்வொரு ரசிகர்களையும் சொல்ல வைத்துள்ளது தான் இப்படத்தின் மகிமை

கண்டிப்பா கார்த்தி வேணும்
இப்போது உள்ள தலைமுறை ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 எப்போது வரும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒரு பாகம் 2 முதல்கட்ட பணிகளை தொடங்கினார். மேலும் ஆயிரத்தில் ஒருவர் பாகம் 2 ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாக கண்டிப்பாக கார்த்தி வேண்டும். அவர் இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 நகராது. நான் ஏற்கனவே சோழ தேசத்தை நோக்கி பாதி தூரம் பயணம் செய்து விட்டேன். இனி உங்களை சோழ தேசத்திற்கு அழைத்துச் செல்வது தான் மீதம் உள்ளது. என சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications