சிங்கிள் மதர்னு தனலட்சுமி சொன்னது உண்மைதான்..குழப்பிய தனாவின் அம்மா..திருத்திய வனிதா

சிங்கிள் மதர்தான் என்று தனலட்சுமி சொன்னது உண்மைதான் ஆனால் என் கணவர் என்னுடன் இருக்கிறார். என்று தனலட்சுமியின் தாய் கூறியதை வனிதா திருத்தினார்.

தனலட்சுமி தனது கதையை கூறும்போது தனது அப்பா தன் அம்மாவை விட்டுட்டு போய்விட்டார், சிங்கிள் மதர்னு கூறியது பற்றி அவரது தாயார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை வனிதா கேட்ட கேள்விக்கு தனலட்சுமியின் தாய் பதிலளித்துள்ளார்.

 தனலட்சுமியின் நிதானமற்ற போக்கு

தனலட்சுமியின் நிதானமற்ற போக்கு

பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமியின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. தனலட்சுமி நிதானம் தவறி பேசுவதும், அவரது மோசடித்தனமான வெற்றி குறித்தும் கமல் போனவாரம் விமர்சித்ததால் தனலட்சுமி பேசு பொருளானார். தனலட்சுமி இவ்வாறு பேசுவது அவர்நடந்துக்கொள்வது பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமா? அல்லது அவரது இயல்பான நடத்தையே அப்படித்தானா? என்று அவரது தாயார் தேவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 தனது தாயார் சிங்கிள் மதர் என ஏன் பொய் சொன்னார் தனலட்சுமி

தனது தாயார் சிங்கிள் மதர் என ஏன் பொய் சொன்னார் தனலட்சுமி

தனியார் யூடியூப் சேனலுக்கு தனலட்சுமியின் தாயார் அளித்த பேட்டியில் வனிதா மற்றும் நிகழ்ச்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். தனலட்சுமி தனது தாயார் சிங்கிள் மதர் என்றும் தன்னை தன்னந்தனியாக வளர்த்தார் என்று தனலட்சுமி கூறியதை சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். அப்பா இப்பவும் வீட்டில் இருக்கும்போது தனலட்சுமி பொய் சொல்வது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 சிங்கிள் மதரா இல்லையா குழப்பிய தனாவின் தாயார்

சிங்கிள் மதரா இல்லையா குழப்பிய தனாவின் தாயார்

இதை வனிதா கேட்டபோது உங்கள் கணவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்று கேட்டபோது இங்கதான் வீட்டில் இருக்கிறார் என்று சொன்னவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது டூ வீலர் மெக்கானிக்காக இருக்கிறார் என்கிறார். ஆனால் வீட்டுக்கு அவர் பணம் தருவதில்லை என்கிறார். இதை வனிதா, இது சிங்கிள் மதர் அல்ல அந்த நேரத்தில் ஒரு முடிவெடுப்போம் பின்னர் மெச்சூரிட்டு அடைந்த பின் திரும்ப வந்து குடும்பம் சேர்ந்திருக்கும், உங்களுக்கு அதிர்ஸ்டவசமாக அது நடந்துள்ளது, நீங்கள் சிங்கிள் மதர் அல்ல, இண்டிபெண்டண்ட் மதர். அம்மா இருந்து குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்று கூறி இதற்கு மேல் இதுபற்றி பேச வேண்டாம் என்று முடித்து வைத்தார்.

 உங்கள் மகளுக்கு நிதானத்தை கற்றுக்கொடுங்கள்- தனலட்சுமியின் தாயிடம் வனிதா

உங்கள் மகளுக்கு நிதானத்தை கற்றுக்கொடுங்கள்- தனலட்சுமியின் தாயிடம் வனிதா

அதன் பின்னர் பேசிய தனலட்சுமியின் தாயார், தனலட்சுமி வீட்டுக்குள் அவள் என்ன செய்றதுன்னு தெரியாமல் செய்கிறார். அவரை அழக்கூடாது என்று அனுப்பி வைத்தோம் ஆனால் அவள் அதை கேட்காமல் அழுகிறார், மற்றப்படி தனலட்சுமிக்கு நல்லது கெட்டதை எடுத்துச் சொல்ல ஆள் இல்லை ஆகவே அவள் அப்படி நடக்கிறார் என்றார். அதற்கு வனிதா உங்கள் மகள் வெளியில் வந்தவுடன் திட்டாதீர்கள் வீம்புக்கு எந்த விஷயத்துக்கும் போகக்கூடாது. ஆகவே நிதானமாக இருக்கச் சொல்லுங்கள் என அறிவுரை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X