அந்த மாதிரி படம் எடுக்க முடியாது.. நடிகர் விக்ரம் பிரபு!

சென்னை : நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் டாணாக்காரன்

1990களில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் டாணாக்காரன் படம் குறித்து விக்ரம் பிரபு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்

வித்தியாசமான கதாபாத்திரங்களை

வித்தியாசமான கதாபாத்திரங்களை

நடிகர் பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு இப்போது தமிழ் சினிமாவில் சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மிகச் சிறந்த இளம் நடிகராக உள்ளார் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்ரம் பிரபுவுக்கு முதல் படத்திலேயே ரசிகர்கள் பெரும் ஆதரவை அளித்தனர் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் கமர்ஷியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது.

கிராமத்து கதை களத்தில்

கிராமத்து கதை களத்தில்

இந்த நிலையில் கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி என்ற வித்தியாசமான கதையில் நடித்து இருந்தார். தொடர்ந்து கிராமத்து கதை களத்தில் படங்களை இயக்கி வரும் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு லட்சுமிமேனன் இந்த படத்தில் ஜோடியாக நடித்து இருப்பார்கள்.

டாணாக்காரன்

டாணாக்காரன்

அடுத்ததாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜெய் பீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய நடிகர் தமிழ் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறை அதிகாரிகளை பற்றியும் காவல்துறையில் எந்த மாதிரியான பயிற்சிகள் கொடுக்கிறார்கள் என்பது பற்றியும் முழு விவரத்துடன் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது . மேலும் இந்த படம் 1990களில் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கும் டாணாக்காரன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

அந்த மாதிரி படம் எடுக்க முடியாது

அந்த மாதிரி படம் எடுக்க முடியாது

திரையரங்குகளில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது டாணாக்காரன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது அதன்படி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் டாணாக்காரன் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் டாணாக்காரன் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விக்ரம் பிரபு இந்த படம் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் அந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியாது என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X