அப்பாடி, தானா சேர்ந்த கூட்டம் ஷூட்டிங் ஒருவழியா முடிஞ்சிடுசுப்பா
சென்னை:தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது பொங்கலுக்கு வர்றோம் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். அந்த படத்தின் டீஸர் கடந்த 30ம் தேதி வெளியாகி பட்டையை கிளப்பியது.

சூர்யா பேசிய பன்ச் வசனம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கீர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்துவிட்டது பொங்கலுக்கு வர்றோம் என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி. தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. டிஎஸ்கே டப்பிங் பேசிக் கொண்டிருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி ட்வீட்டியுள்ளார்.
பொங்கல் எப்பொழுது வரும், படத்தை பார்க்கலாம் என்று சூர்யா ரசிகர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications