நடிகர் விஜய்யிடம் ஐடி விசாரணை.. சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு.. மாஸ்டர் ஷூட்டிங் ரத்து!

Recommended Video

Thalapathy Vijay in Tragedy | Master Shooting Spot | Vijay Sethupathi

சென்னை: மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயிடம் சம்மன் வழங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் அங்கேயே விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் கையோடு சென்னைக்கு அழைத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் திரைத்துறையை சேர்ந்த முக்கிய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை சோதனை தொடங்கியது.

ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட் குழுமத்தின் அலுவலகம் மற்றும் சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அன்புச்செழியன் வீட்டில்

அன்புச்செழியன் வீட்டில்

இதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

என்எல்சியில் ஷுட்டிங்

என்எல்சியில் ஷுட்டிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

அங்கேயே விசாரணை

அங்கேயே விசாரணை

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்க்கு நேரில் சம்மன் வழங்கினர். பின்னர் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்தப்படியே நடிகர் விஜய்யை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னாதாக விசாரணைக்கு விஜய் தனியாக அழைத்துச் செல்லப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சென்னை வருகை

சென்னை வருகை

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜயிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை கையோடு சென்னைக்கு அழைத்து வருகின்றனர். சென்னையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. நடிகர் விஜயின் காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னைக்கு வருகின்றனர்.

பிகில் படம்...

பிகில் படம்...

இதனால் மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஷுட்டிங் ஸ்பாட்டில் இறுக்கமான சூழல் ஏற்பட்டது. நடிகர் விஜய், கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த பிகில் படத்தில் நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது விஜயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X