சந்தானம், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் ரெய்டு

By Siva

சென்னை: ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தியுள்ளனர்.

Raid

இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இன்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது.

சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தானம் தற்போது 15 படங்களில் நடித்து வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X