Dil Raju: விஜய் பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு.. அதிரடியாக புகுந்த 55 அதிகாரிகள்!
சென்னை: விஜய் நடித்த வாரிசு, ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள வீடு, அலுவலகம் என 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார் . 2003ம் ஆண்டில் மொழி என்ற படத்தை தயாரித்தார். அதைத்தொடர்ந்து, அல்லு அர்ஜூன்,சிரஞ்சீவி, ரவி தேஜா, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்டப் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல திரைப்படத்தை தயாரித்து இருந்தார். தெலுங்கு தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ, விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து தமிழ் திரைத்துறையில் தனது தடத்தை பதித்தார்.

ரூ.450 கோடியில் படம்: இதைத்தொடர்ந்து, பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் வெளியானது. ரூ.450 கோடிக்கு தயாரித்த 'கேம் சேஞ்சர்' படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் பாடலுக்கு மட்டுமே 75 கோடி செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் தில்ராஜுக்கு வெறும் பத்து சதவீதம் மட்டும் தான் லாபம் கிடைத்தது என்றும். 400 கோடி போட்டு படம் எடுக்கும் போது வெறும் 10 சதவீதம் லாபம் என்பது சரியானது இல்லை.
8 இடத்தில் ரெய்டு: மேலும், கேம் சேஞ்சர் படத்தை எடுப்பதற்காக அவர் வீட்டை அடமானம் வைத்து தான் பணத்தை அதில் முதலீடு செய்வதாக சினிமா பிரபலங்கள் கூறி வந்த நிலையில், இன்று தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கோண்டாப்பூர், கச்சிபெளலி , அலுவலகம் என 8 இடங்களில் காலை முதல் 55 வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் ரெய்டு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











