twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷாலுக்கு பாஜக அரசின் மிரட்டல்... என்ன செய்யப் போகிறது தமிழ் சினிமா?

    By Shankar
    |

    இந்தியாவில் 1957க்கு பின் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனோ நிலை துளிர் விட்டு வளரத் தொடங்கியது. அந்த நேரத்தில்தான் இந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னட, தமிழ் சினிமாக்கள் மறுமலர்ச்சிப் பாதையில் நடைபயிலத் தொடங்கின.

    சினிமாவை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சார களமாக பயன்படுத்தியவர்கள் இடது சாரிகள். அதனையே முன்னுதாரணமாக்கி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட இயக்கத்தினர். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலையில் இருந்த போது திராவிட இயக்க நடிகர்களை மிரட்ட மத்திய அரசு கையாண்ட ஆயுதம் தான் வருமான வரி பாக்கி பற்றிய தகவல்கள்.

    IT raid: A direct threat to Vishal

    பாராளுமன்றத்தில் நடிகர்கள் வைத்திருக்கும் வரி பாக்கி பற்றி எழுத்து மூலமான கேள்வி காங்கிரஸ் உறுப்பினரால் கேட்கப்படும். அதற்கு சம்பந்தபட்ட அமைச்சர் உடனடியாக பதில் கூறுவார்.

    நாடு முழுமையும் இது தலைப்பு செய்தியாக வெளிவர காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கும். தமிழகத்தில் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் மூவரும் இந்தப் பட்டியலில் தவறாமல் இடம் பெறுவார்கள்.

    கால மாற்றம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இப்போது நேரடி சோதனையாக, விளக்கம் கேட்கும் நோட்டீசு என மாறியிருக்கிறது. ஊடக வளர்ச்சி இதனை மக்களிடம் கொண்டு சென்று சம்பந்தபட்டவர்களின் சமூக கெளரவத்தைச் சீர்குலைக்க மத்திய அரசு கையாளும் யுக்திதான் வருமான வரி சோதனை.

    விஷாலிடம் ரூ 51 லட்சத்திற்கு விளக்கம் கேட்கும் வருமான வரித் துறை இதனை யாருக்கும் தெரியாமல் கேட்டிருக்கலாம். ஊடகங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு நோட்டீசை அனுப்பியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாகிவிட்ட வருமான வரித்துறை.

    மெர்சல் படவிவகாரத்தில் 'இது அத்துமீறிய செயல், அப்புறம் தணிக்கைத் துறை எதற்கு?' என நேரடியாக கேள்வி எழுப்பியவர் நடிகர் விஷால். திரையுலகம் சம்பந்தபட்ட யாரும் நேரடியாக இப்படியொரு கேள்வியை கேட்கத் தயங்கினார்கள்.

    விஷால் மத்திய அரசை நேரடியாக விமர்சித்த உடன் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் கோடம்பாக்கத்தை மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது.

    மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தேவையற்ற சோதனைகளைச் சந்திக்க நேரும் என்பதை விஷாலை வைத்து உணர்த்தியிருக்கிறது. நேர்மையான கணக்கு வழக்குகளை பராமரிக்கும் திரைக் கலைஞர்கள் பயப்படத் தேவையில்லை.

    தமிழ் சினிமா பொருளாதாரம் கறுப்பு - வெள்ளையில் இருப்பதால் உரசிப் பார்க்க தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. கோடம்பாக்கம் ஒன்று கூடி விஷாலுக்கு ஆதரவு குரல் கொடுக்குமா இல்லை... நமக்கேன் வம்பு என்று வேடிக்கை பார்க்க போகிறதா?

    English summary
    The BJP govt has warned Vishal who directly attacked in Mersal issue, through IT raid. What will be the reaction of Kollywood?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X