மீண்டும் சிக்கலில் விஜய்.. மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் வீடு அலுவலகங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பு!

சென்னை: மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம்.

மத்திய அரசை தாக்கி

மத்திய அரசை தாக்கி

மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் அண்மையில் ரிலீஸானது. இதில் பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை குறித்து நேரடியாக மத்திய அரசை தாக்கி பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் எழுதியிருந்தார். தமிழும் ஆங்கிலமும் கலந்து இப்பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

ரூ. 220 கோடிக்கு விநியோகம்

ரூ. 220 கோடிக்கு விநியோகம்

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு பிஸ்னஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் படம் 220 கோடி ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முதல் சோதனை

நேற்று முதல் சோதனை

அதில் இணை தயாரிப்பாளரான லலித் குமாருக்கு 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் லலித் குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம்

ஏஜிஎஸ் நிறுவனம்

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் இருந்து 24 கோடி ரூபாய் பணமும் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

பரபரப்பு

பரபரப்பு

அன்புச்செழியன் வீட்டில் இருந்து மட்டும் 70 கோடி ரூபாய் பணமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வரும் 15ஆம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் இந்த ரெய்டு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X