அஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு: 4 அதிகாரிகள் சோதனை

By Siva

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே உள்ள விவேகம் பட வினியோகஸ்தர் வெங்கடாசலத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், சசிகலாவின் உறவினரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 186 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

IT raid in Vivegam distributor's house

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் வடகாட்டில் இருக்கும் விவேகம் பட வினியோகஸ்தர் வெங்கடாசலத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் வீட்டில் 4 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ரூ. 6.25 கோடிக்கு விவேகம் படத்தை வாங்கி திருச்சியில் வெளியிட்டது குறித்து சோதனை நடந்து வருகிறது. வெங்கடாசலம் வீட்டில் சோதனை நடப்பதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் 200 வாடகை கார்களில் வந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X