சாண்டல்வுட்டில் 23 இடங்களில் ஐடி ரெய்டு: ஏகப்பட்ட பணம், நகை சிக்கியது

By Siva

Recommended Video

சென்னையின் பிரபல உணவகங்களில் ரெய்டு | சினிமா பிரபலங்கள் வீடுகளிலும் ரெய்டு- வீடியோ

பெங்களூர்: பெங்களூரில் நடிகர்கள் யஷ், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 23 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

கன்னட திரையுலகில் முக்கியமான நபர்களின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறையினர் வந்து கதவை தட்டிய பிறகே சிலர் கண் விழித்துள்ளனர்.

இந்த சோதனைகளால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யஷ்

யஷ்

பிரபல நடிகர்கள் சிவராஜ்குமார், அவரின் தம்பி புனித் ராஜ்குமார், கே.ஜி.எஃப். மெகா ஹிட் படத்தின் ஹீரோ யஷ், சுதீப், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், சி.ஆர். மனோகர், விஜய் கென்டரு உள்ளிட்டோரின் வீடுகளில் இன்று காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

200 பேர்

200 பேர்

கன்னட திரையுலகை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 23 இடங்களில் இன்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 200 பேர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைகளால் கன்னட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும் புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்துள்ளது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ராக்லைன் வெங்கடேஷ் லிங்கா படத்தை தயாரித்தவர். அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், சினிமா தயாரிப்பாளருமான முனிரத்னாவின் உறவினர். விஜய் கென்டரு அண்மையில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் படத்தை தயாரித்தவர். சிவராஜ்குமார் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மருமகன்.

பணம்

பணம்

இன்று சோதனை நடந்த இடங்களில் ஒரு இடத்தில் மட்டும் நிறைய பணம் மற்றும் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. தங்க நகைகளை மதிப்பிட ஆட்களை அழைத்துச் சென்றுள்ளனர் அதிகாரிகள். நகை, பணம் சிக்கியது எந்த இடம் என்று இன்னும் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X