லாக்டவுனில் ஹேப்பி நியூஸ்.. மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

சென்னை: தனது படத்தின் செட் அடித்து நொறுக்கப்பட்ட கவலையில் இருந்த நடிகர் டொவினோ தாமஸுக்கு சந்தோஷமான செய்தி கிடைத்துள்ளது.

மலையாள சினிமாவின் இளம் ஹீரோவான டொவினோ தாமஸுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த மகிழ்ச்சியை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் நடிகர் டொவினோ தாமஸ்.

தனுஷ் வில்லன்

தனுஷ் வில்லன்

மலையாள திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் டொவினோ தாமஸ், இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

லாக்டவுனுக்கு முன்னதாக

லாக்டவுனுக்கு முன்னதாக

2012ம் ஆண்டு வெளியான பிரபுவின்ட்டே மக்கள் படத்தின் மூலமாக அறிமுகமான டொவினோ, பிருத்விராஜின் என்னு நின்ட்டே மொய்தீன் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதினை பிலிம்ஃபேர் விருது விழாவில் பெற்றார். லாக்டவுனுக்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அடித்து நொறுக்கப்பட்ட பிரம்மாண்ட செட்

அடித்து நொறுக்கப்பட்ட பிரம்மாண்ட செட்

டொவினோ தாமஸின் ‘கோதா' படத்தை இயக்கிய இயக்குநர் பசில் ஜோசப் இயக்கத்தில் லோக்கல் சூப்பர்மேன் கதையை கொண்டு உருவாகி வரும் 'மின்னல் முரளி' படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட தேவாலய செட்டை, சில நாட்களுக்கு முன்னர், அகில இந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் அமைப்பினர் அடித்து நொறுக்கியது பரபரப்பை கிளப்பியது.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

தனது படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டை அடித்து நொறுக்கியது குறித்து மனம் நொந்து கிடந்த டொவினோ தாமஸுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ள செய்தி கிடைத்திருக்கிறது. தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ‘It's a boy' என பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே

ஏற்கனவே

கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான லிடியாவை மணந்து கொண்டார் டொவினோ தாமஸ். இருவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அதற்கு இசா என பெயர் வைத்துள்ளார். தற்போது ஆண் குழந்தைக்கு அப்பாவாகி இருக்கும் ஹீரோ டொவினோ தாமஸுக்கு அவரது ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X