பாதுகாப்புக்கான முதல் வழி... தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விக்ரம் பிரபு
சென்னை : நடிகர் விக்ரம் பிரபு கொரானா தடுப்பூசியின் முதல் டோசை இன்றைய தினம் போட்டுள்ளார்.
பாதுகாப்புக்கான முதல் வழி இது என்று தெரிவித்துள்ள அவர், மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
விக்ரம் பிரபு, லஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

புலிக்குத்தி பாண்டி படம்
நடிகர் விக்ரம் பிரபு -லஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பானது புலிக்குத்தி பாண்டி படம். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

முக்கிய கதாபாத்திரம்
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம் பிரபு. இதேபோல மணிவேல் இயக்கத்தில் பகையே காத்திரு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலஷ்மி சரத்குமார் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் அவருடன் இணைந்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.
Recommended Video

முதல் டோசை போட்ட விக்ரம் பிரபு
இந்நிலையில் இன்றைய தினம் விக்ரம் பிரபு கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர் பாதுகாப்பிற்கான முதல் படி இது என்று தெரிவித்துள்ளார். அனைவரும் தடுப்பூசி போடவும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும் அவர் கோரியுள்ளார்.

இடைவெளியை பின்பற்றுங்கள்
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றி தொடர்ந்து பாதிப்புகள் தொடராமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தனக்கு சிறப்பான வகையில் தடுப்பூசியை போட்ட மெட்வே சிஇஓ டாக்டர் பழனியப்பனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications