முடிந்தது லியோ ஷூட்டிங்.. யப்பா எவ்ளோ கஷ்டப்பட்ருக்காங்க - வெளியானது சர்ப்ரைஸ் வீடியோ

சென்னை: காஷ்மீரில் நடந்துவந்த லியோ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கும் சூழலில் அதுதொடர்பான சர்ப்ரைஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். வாரிசு பெற்ற கலவையான விமர்சனத்தை லியோ படத்தில் போக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் விஜய். இதன் ப்ரோமோ வீடியோவும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. லலித்குமார் தயாரித்துவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

காஷ்மீரில் நடந்த விறுவிறு ஷூட்டிங்

காஷ்மீரில் நடந்த விறுவிறு ஷூட்டிங்

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இதில் மிஷ்கின், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து அவர்கள் சென்னை திரும்பியிருக்கின்றனர்.

லியோ படக்குழுவுடன் இணைந்த சஞ்சய் தத்

லியோ படக்குழுவுடன் இணைந்த சஞ்சய் தத்

காஷ்மீருக்கு லியோ படக்குழு சென்று ஏறத்தாழ இரண்டு மாதங்கள் முடிந்த சூழலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அவர் சில வாரங்களுக்கு முன்னதாக லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவரை விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

லியோ ஷூட்டிங் நிறைவடைந்தது

லியோ ஷூட்டிங் நிறைவடைந்தது

படத்தில் நடிப்பவர்களில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோருக்கான ஷூட்டிங் மட்டும் காஷ்மீரில் நடந்துவந்ததாகவும் இந்த வாரத்துக்குள் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்துவிடும் என்றும் தகவல் வெளியானது., அதன்படி லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் இன்றுடன் முடிவடைந்திருக்கிறது. இதனையொட்டி படக்குழு சார்பில்ச் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு

சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு

சுமார் ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஒட்டுமொத்த படக்குழுவும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், காஷ்மீரில் இறங்கிய முதல் நாளிலிருந்து கடைசிநாள் வரை இருந்த அனுபவத்தை பலரும் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருப்பவர்கள், லைட் மேன்கள் பணியாற்றும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யப்பா இவ்வளவு கஷ்டப்படுறாங்களே. அவர்களை முதல்முதலில் ப்ரோமோவில் பயன்படுத்திய லோகேஷுக்கு வாழ்த்தும் தெரிவித்துவருகின்றனர்.

க்ளைமேக்ஸ் ஷூட்டிங் எங்கு நடக்கப்போகிறது?

க்ளைமேக்ஸ் ஷூட்டிங் எங்கு நடக்கப்போகிறது?

படக்குழு சென்னைக்கு எப்போது திரும்பப்போகிறது என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் சென்னை திரும்பியவுடன் சிறிது ரெஸ்ட் எடுத்த பிறகு சென்னையில் ஒருவாரம் படத்தை ஷூட் செய்துவிட்டு படத்தின் க்ளைமேக்ஸை ஷூட்டிங் செய்வதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டியை தேர்ந்தெடுத்திருக்கிறதாம் படக்குழு.

காஷ்மீர் நிலநடுக்கம் குறித்து லியோ படக்குழு

காஷ்மீர் நிலநடுக்கம் குறித்து லியோ படக்குழு

முன்னதாக, காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது லியோ படக்குழு அங்குதான் இருந்தது. அதுதொடர்பாக படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில், சந்திரமுகி படத்தில் அரண்மனைக்குள் வடிவேலு செல்லும்போது பொருள்கள் உடையும் காட்சியை பகிர்ந்து, நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் நண்பா என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X