சென்னை எப்பவும் ஸ்பெஷல்தான்... அசுரன் ஹிட்டுக்குப் பிறகு வேற லெவல் ஸ்பெஷல்... பச்சையம்மாள் பளிச்
சென்னை: சென்னைக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம்தான் என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை விவகாரத்து செய்த பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தமிழில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், நல்ல கேரக்டருக்காகக் காத்திருந்தார்.

பச்சையம்மாள்
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் பட வாய்ப்பு கிடைத்தது. இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு பெரும் புகழைத் தந்துள்ளது.

விஜய் சேதுபதி ஜோடி
இதையடுத்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே விஜய் சேதுபதி ஜோடியாக அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் அடுத்த வருடம் ஏப்ரலில் தொடங்குகிறது.

மகிழ்ச்சியானது
இதற்கிடையே சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர், எப்போது சென்னைக்கு வந்தாலும் அது மகிழ்ச்சியானதுதான் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, அசுரனுக்கு முன்பே, நான் இங்கு பல முறை வந்திருக்கிறேன். எனது பல படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இங்குதான் நடந்தன. அதற்காக பலமுறை வந்திருக்கிறேன்.

ஸ்பெஷலானது
அசுரனுக்குப் பிறகு இங்கு வருது ஸ்பெஷலானது. இப்போது பலர் என்னை அடையாளம் கண்டு கவனிக்கிறார்கள். பேசுகிறார்கள். தமிழில் இன்னும் சிறந்த கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











