பவர் ஸ்டார் பக்கத்தில் நிற்பதே பெரும் பாக்கியம்: விஷால் ஹீரோயின் நெகிழ்ச்சி
ஹைதராபாத்: பவர் ஸ்டார் பக்கத்தில் நிற்பதே பாக்கியம் என்று நடிகை அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
துப்பறிவாளன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் அனு இம்மானுவேல். அவர் தற்போது டோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். தெலுங்கு படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்.
இந்நிலையில் அவர் தெலுங்கு திரையுலகம் பற்றி கூறியதாவது,

கவலை
என் முதல் தெலுங்கு படமான ஆக்சிஜன் இன்னும் ரிலீஸாகவில்லை என்று கவலை இல்லை. ஏன் என்றால் நான் நடித்த மற்ற 2 தெலுங்கு படங்கள் ரிலீஸாகிவிட்டன.

வாய்ப்பு
எனக்கு பட வாய்ப்புகள் வருகிறது. வாய்ப்புகள் வருவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. என் முதல் படத்திலேயே கோபிசந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் லக்கி.

மொழி
என் முதல் படத்தில் மாமய்யா என்று கூற நான் சிரமப்பட்டேன். ஆனால் தற்போது எனக்கு தெலுங்கு மொழி நன்றாக புரிகிறது. பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடிப்பதால் ஹைதராபாத்தில் செட்டிலாக விரும்புகிறேன்.

மக்கள்
எனக்கு இங்குள்ளவர்களை பிடித்துள்ளது. மலையாள திரையுலகை விட டோலிவுட் சிறப்பாக உள்ளது. இங்கு தான் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது.

பயம்
பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் முதல் நாள் நடித்தபோது பயமாக இருந்தது. அவரை பார்த்த உடன் வசனம் எல்லாம் மறந்துவிட்டது. அவர் ஜாலியான ஆள், ஜோக்கடித்துக் கொண்டே இருப்பார். அவர் அருகில் நிற்பதே பாக்கியம் என்றார் அனு.


Click it and Unblock the Notifications











