முதலில் விஜய், இப்போ அஜீத், சூர்யா: இது 'இரட்டையர்' சீசன்
சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் 3 பேர் சொல்லி வைத்தது போன்று ஒரே நேரத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள்.
கோலிவுட்டில் இது இரட்டை வேடங்கள் சீசன் போன்று. முன்னணி ஹீரோக்கள் மூன்று பேர் தங்களின் புதிய படங்களில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள்.
அது யார், யார் என்று பார்ப்போம்.

விஜய்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

அஜீத்
அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒரு கதாபாத்திரம் நல்லவனாகவும், மற்றொரு கதாபாத்திரம் கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சூர்யா
சூர்யா லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவர் ஸ்டைலான இரண்டு வேடங்களில் வருகிறார் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

சமந்தா
விஜய் மற்றும் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்களின் நாயகி சமந்தா. இந்நிலையில் அஜீத் ஜோடியாக கௌதம் மேனன் படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











