விஜய்க்கு ஏற்ற டான்ஸ் ஜோடி கிடைச்சாச்சு
சென்னை: விஜய்க்கு ஏற்ற ஜோடி த்ரிஷா என்றாலும், அவருக்கு ஏற்ற டான்ஸ் ஜோடி காஜல் அகர்வால் தான்.
விஜய் சூப்பராக டான்ஸ் ஆடுவார் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பிரபுதேவா இயக்கிய இந்தி படமான ரவுடி ரத்தாரில் விஜய் ஒரு பாடலில் அதுவும் சில ஸ்டெப்ஸ் தான் போட்டிருப்பார். அதற்கே படத்தின் நாயகன் அக்ஷய் குமார் அதிர்ந்துவிட்டார். இவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
விஜய் நச்சுன்னு ஆடினாலும் படத்தில் அவருடன் ஆடும் நாயகிகளும் அவருக்கு இணையாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் விஜய்க்கு இணையாக டான்ஸ் ஆடிய நாயகி என்றால் அது சிம்ரன் மட்டுமே. இந்நிலையில் விஜய்க்கு ஏற்ற புதிய டான்ஸ் ஜோடி கிடைத்துள்ளது.

விஜய்க்கு இணையாக ஆடிய சிம்ரன்
விஜயின் வேகத்திற்கு ஈடு கொடுத்து சூப்பராக டான்ஸ் ஆடிய நாயகி சிம்ரன் தான். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய பாடல்களை எப்பொழுதுமே பார்க்கலாம். அவ்வளவு நன்றாக இருக்கும்.

அப்போ த்ரிஷா?
த்ரிஷாவை விஜய்க்கு ஏற்ற டான்ஸ் ஜோடி என்று கூற முடியாது. இருவரையும் சேர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும்.

சிம்ரனை அடுத்து காஜல்
சிம்ரன் அம்மா வேடத்திற்கு சென்ற பிறகு விஜயுடன் எத்தனையோ ஹீரோயின்கள் நடித்துவிட்டனர். ஆனால் அவருக்கு ஈடுகொடுத்து ஆடும் அளவுக்கு யாரும் இல்லை. இந்நிலையில் துப்பாக்கி படத்திற்காக விஜயுடன் ஜோடி சேர்ந்த காஜல் அவருக்கு இணையாக டான்ஸும் ஆடுகிறார். பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஏற்ற டான்ஸ் ஜோடி கிடைத்துள்ளது. விஜய்-காஜல் ஜோடி பார்ப்பதற்கும் நன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











