»   »  8 ஆண்டுகள் கழித்து அஜீத் படத்திற்கு மீண்டும் இசையமைக்கும் 'டார்லிங்'

8 ஆண்டுகள் கழித்து அஜீத் படத்திற்கு மீண்டும் இசையமைக்கும் 'டார்லிங்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து எடுக்கும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளாராம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கௌதம் என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை தயார் செய்துவிட்டார். அஜீத்தின் ஒப்புதலுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறார்.

அஜீத் தற்போது 2 மாத ஓய்வில் உள்ளார். கர்ப்பிணி மனைவியுடன் நேரத்தை செலவிடவே இந்த குட்டி பிரேக் எடுத்துள்ளார் அஜீத்.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஏப்ரல் 14

ஏப்ரல் 14

வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி அஜீத், சிறுத்தை சிவா படத்தை பூஜை போட்டு துவங்குகிறார்களாம். படத்திற்கு தற்போதைக்கு தல 56 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அனிருத்

அனிருத்

தல 56 படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

தல 56 படத்திற்கு அனிருத் இல்லை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளாராம். சிறுத்தை சிவா பிரகாஷ் குமாரை அணுகி தனது படத்திற்கு இசையமைக்குமாறு கேட்க அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

கிரீடம்

கிரீடம்

8 ஆண்டுகள் கழித்து ஜி.வி.பிரகாஷ் குமார் அஜீத் படத்திற்கு மீண்டும் இசையமைக்க உள்ளார். முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு வெளியான அஜீத்தின் கிரீடம் படத்திற்கு ஜி.வி. தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
It is not Anirudh but GV Prakash Kumar who is going to tune for Thala 56 to be directed by Siruthai Siva.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil