ஆனா ஆவன்னா அப்னா டைம்னா.. மாஸ்டர் ரிலீஸ்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்!
சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Recommended Video

விஜய், மாளவிகா மோகனன் நடித்துள்ள படம், மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

கொரோனா தீவிரம்
இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

பொங்கல் ரிலீஸ்
லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே இந்த படம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் சந்தித்தார்.

நூறு சதவிகிதம்
தற்போது தியேட்டரில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூறு சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறி இருந்தார்.

ரசிகர்கள் உற்சாகம்
இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி பொங்கலன்று ஜனவரி 13 ஆம் தேதி, மாஸ்டர் படம் வெளியாகிறது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

வாத்தி ரைட்னா
இதுபற்றிய அறிவிப்பில் ஆனா ஆவன்னா அப்னா டைம்னா, வாங்கண்ணா வணக்கங்கண்ணா இனி வாத்தி ரைட்னா, 'வாத்தி ஜனவரி 13 ஆம் தேதி வருகிறார்' என்று கூறியுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்த பட போஸ்டர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











