அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியீடு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அஜீத்தின் என்னை அறிந்தால் படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்பதை இன்று வெளியான விளம்பரங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர்.
என்னை அறிந்தால் படம் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக பிப்ரவரி 5-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக தகவல் வெளியானது. இதனை அயங்கரன் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் வெளியாகும் திரையரங்குகள் விவரங்களுடன் இன்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றில் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 5 என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications












