முடிவுக்கு வந்த உறவு.. கிம் கர்தாஷியன், கன்யே வெஸ்ட் விவாகரத்து பேச்சுவார்த்தை தொடங்கியது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கிம் கர்தாஷியன் மற்றும் கன்யே வெஸ்ட் விவாகரத்து செய்து கொள்ளப் போவது 99 சதவீதம் உறுதியாகி விட்டதாம்.

கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய பிரபல வழக்கறிஞர் லாரா வாஸரை கிம் கர்தாஷியன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இரு முறை கிம் கர்தாஷியனுக்கு இந்த வழக்கறிஞர் தான் விவாகரத்து செய்து வைத்துள்ளார்.

சர்வதேச சூப்பர் மாடல்

சர்வதேச சூப்பர் மாடல்

சுமார் 180 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டு சர்வதேச சூப்பர் மாடலாக திகழ்கிறார் கிம் கர்தாஷியன். அண்மையில், அவரது அழகு சாதான நிறுவனமும், பல நூறு கோடிகளை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்து இருந்தது. ரியாலிட்டி ஷோ நடிகையாக அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களையும் கவர்ந்தவர் கிம் கர்தாஷியன். அவருக்கு வயது 40.

நான் தான் ஜனாதிபதி

நான் தான் ஜனாதிபதி

மாடல் அழகி கிம் கர்தாஷியனின் கணவரும் 43 வயதான அமெரிக்காவின் ராப் இசை பாடகராவும் திகழும் கன்யே வெஸ்ட், கடந்த ஆண்டு, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, உலகளவில் கவனம் ஈர்த்தார். பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ள இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது மனைவி கிம் சம்மதம் தெரிவிக்கவில்லை.

காஸ்ட்லி கல்யாணம்

காஸ்ட்லி கல்யாணம்

இத்தாலியில் கடந்த 2014ம் ஆண்டு பல கோடிகளை செலவழித்து இருவரும் காஸ்ட்லி கல்யாணம் செய்து கொண்டனர். கன்யே - கிம் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் குழந்தை நார்த்துக்கு 7 வயது, மகன் செயின்ட்டுக்கு 5 வயது, மகள் சிக்காகோவிற்கு 3வயது ஆகப் போகிறது, கடைக்குட்டி மகன் சாமுக்கு 19 மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

காதல் சர்ச்சை

காதல் சர்ச்சை

கடந்த 2018ம் ஆண்டு ராப் இசை பாடகரான மீக் மில்லுடன் இணைந்து சிறைகளை சீரமைக்கும் பணியை கிம் மேற்கொண்டார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக கன்யே வெஸ்ட் பல முறை கிம் கர்தாஷியனை விவாகரத்து செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், கர்தாஷியன் ஒவ்வொரு முறையும் அதை தவிர்த்து வந்த நிலையில், தற்போது விவகாரத்து பெற தீவிரமாக இறங்கியுள்ளார்.

பல கோடி செட்டில்மென்ட்

பல கோடி செட்டில்மென்ட்

கன்யே வெஸ்ட்டும், கிம் கர்தாஷியனும் இணைந்து பல கோடி சொத்துக்களை கடந்த 6 ஆண்டுகளாக வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில், முறையான செட்டில்மென்ட் மற்றும் நஷ்ட ஈடு பெற்றுத் தர லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபலமான வழக்கறிஞரான லாரா வாஸரை கிம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது குறித்து இருவரும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலாபசாஸ் வீடு

கலாபசாஸ் வீடு

கன்யே வெஸ்ட் பெயரில் இருக்கும் கலிபோர்னியாவில் உள்ள கலாபசாஸ் வீடு தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தான் சொந்தம் என்று கிம் கர்தாஷியன் வாதாடி வருகிறார். அந்த வீட்டை புணரமைக்க இருவரும் பல கோடி ரூபாய்களை செலவு செய்துள்ளனர். கிம் கர்தாஷியனுக்கு அந்த வீட்டை கண்டிப்பாக லாரா வாஸர் பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீட்டில் மதிப்பு கிட்டத்தட்ட 60 மில்லியன் டாலர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X