twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமா?: அவமானம், அவமானம்- பாலிவுட் நட்சத்திரங்கள்

    By Siva
    |

    மும்பை: ஓரினச் சேர்க்கையாளர்கள் இயற்கைக்கு புறம்பான வழியில் உறவு கொள்வது சட்டவிரோதமானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. மேலும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 இன் படி இயற்கைக்கு புறம்பான வழியில் உறவு கொள்வது சட்ட விரோதமானது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

    இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆமீர் கான்

    ஆமீர் கான்

    தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாக கருதுகிறேன். இது ஒரு அவமானம் என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

    ஃபர்ஹான் அக்தர்

    ஃபர்ஹான் அக்தர்

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறாக உள்ளது. #பிரிவு 377 என்று நடிகர் ஃபர்ஹான் அக்தர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    ஷபானா அஸ்மி

    ஷபானா அஸ்மி

    அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பு! 377 சட்டப் பிரிவை உறுதிபடுத்துவது மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும். 377 சட்டப்பிரிவை நாடாளுமன்றம் தான் ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதம்? எப்படி? என்று நடிகை ஷபானா அஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மாதுர் பந்தர்கர்

    மாதுர் பந்தர்கர்

    எதிர்காலத்தை நோக்கி செல்கிறோம் என்று நினைக்கையில் நாம் கற்காலத்தில் இருப்பது போன்று ஒரு தீர்ப்பு வந்துள்ளது என்று ஹீரோயின்களை மையமாக வைத்து படம் எடுக்கும் இயக்குனர் மாதுர் பந்தர்கர் ட்வீட் செய்துள்ளார்.

    ஜான் ஆபிரகாம்

    ஜான் ஆபிரகாம்

    இந்தியா மீண்டும் தொன்மையான பாரபட்சங்களை காண்பித்துள்ளது. ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என நடிகர் ஜான் ஆபிரகாம் தனது எதிர்ப்பை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

    ஸ்ருதி ஹாஸன்

    ஸ்ருதி ஹாஸன்

    ஒருவர் எப்படி, எப்பொழுது, யாரை காதலிக்க வேண்டும் என்று 377 முடிவு செய்வது பயமுறுத்தும் வகையில் உள்ளது. நம் விருப்பப்படி தேர்வு செய்வது இனி சட்டப்படி சரியாகாது என்று ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சித்தார்த்

    சித்தார்த்

    பிறரின் உரிமையை அளிக்க மறுப்பவர்கள் அனைவருக்கும் வயிறு வலிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

    சிரிஷ் குந்தர்

    சிரிஷ் குந்தர்

    கட்டாயப்படுத்தாத வரை ஓரினச்சேர்க்கையில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் ஃபரா கானின் கணவர் சிரிஷ் குந்தர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Apex court criminalising homosexuality didn't go well with Bollywood celebrities. They
 took to twitter to express their disappointment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X