சிம்புவுக்கு பர்த்டே: ஹன்சிகா நேரில் வாழ்த்து, 'அண்ணன்' தனுஷ் ட்விட்டரில்
சென்னை: சிம்பு தனது காதலி ஹன்சிகாவோடு தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகர் சிலம்பரசன் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். சிறு வயது முதலே 30 வயதை அடைய காத்திருந்ததாக அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தான் விரும்பிய வயதை அடைந்துள்ளார்.

பிசியோ பிசி
சிம்பு பாண்டிராஜ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரின் படங்களில் ஓடியோடி நடத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டார் என்று கூறப்பட்டது.

நள்ளிரவு
சிம்புவின் நண்பர்கள் கேக்கோடு நள்ளிரவில் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று அசத்தினர். 12 மணி அடித்தபோது அவர்கள் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹன்சி
சிம்பு நள்ளிரவில் நண்பர்களோடு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரது காதலியான ஹன்சிகாவும் அங்கு வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிம்புவை வாழ்த்தினார்.

சண்டை இல்லை
சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே தகராறு என்றும், அவர்கள் முகம் கொடுத்து பேசிக் கொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஹன்சிகா நள்ளிரவு கொண்டாடட்டத்திற்கு வந்ததன் மூலம் அவர்களின் காதல் பலமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

பார்ட்டி
பிறந்தநாளுக்கு பார்ட்டி வேண்டும் என்று சிம்புவிடம் அவரது நண்பர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து இன்று மாலை பார்ட்டி கொடுப்பதாக சிம்பு வாக்களித்துள்ளார்.

பிறந்தநாள் பரிசு
சிம்பு தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசை அளித்துள்ளார். அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டீஸரும், வாலு படத்தில் வரும் யூ ஆர் மை டார்லிங் டீஸரும் இன்று வெளியாகியுள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனுஷ், அனிருத், வரலட்சுமி சரத்குமார், மதன்கார்க்கி, காயத்ரி ரகுராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்
சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்னர். அதற்கு சிம்பு தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, உங்கள் அனைவருக்கும் பதில் அளிக்க முடியாததற்கு சாரி. உங்களின் ட்வீட்களை படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி. நீங்க இல்லாம நான் இல்ல என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











