twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னாது.. இன்று சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' பிறந்தநாளா?

    By Siva
    |

    சென்னை: வட இந்தியர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடும் தினத்தன்று தான் ரஜினிகாந்த் பிறந்தார் என்பது தெரியுமா?

    வட இந்தியர்கள் வண்ணமயமாக கொண்டாடும் ஹோலி பண்டிகை தினத்தன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தார் என்று தெரியுமா? ரஜினி பிறந்தநாள் டிசம்பர் 12 நீங்கள் என்னவென்றால் மார்ச் மாதத்தில் சொல்கிறீர்களே என்று நினைக்க வேண்டாம். பொறுமையாகப் படித்துப் பாருங்கள்.

    ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று அனைவருக்கும் தெரியும். சிவாஜி ராவ் ரஜினிகாந்தான தினத்தை தான் அவரது பிறந்தநாள் என்று நாங்கள் சொல்கிறோம். இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்படி என்றால் இன்று ரஜினிகாந்த் பிறந்தநாள் தானே.

    1975ல் ஹோலியன்று ரஜினிகாந்தான சிவாஜி

    1975ல் ஹோலியன்று ரஜினிகாந்தான சிவாஜி

    கடந்த 1975ம் ஆண்டு ஹோலி பண்டிகை அன்று இயக்குனர் கே. பாலசந்தர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இளைஞனை அழைத்து சந்திரகாந்த், ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் இந்த பெயரில் ஒன்றை தேர்வு செய்யும் என்றார். இறுதியில் அவரே சிவாஜிக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை தேர்வு செய்து கொடுத்தார். இப்போது புரிகிறதா ஹோலி ஏன் ரஜினி பிறந்தநாள் என்று.

    ஹோலி அன்று பாலசந்தரை சந்திக்கும் ரஜினி

    ஹோலி அன்று பாலசந்தரை சந்திக்கும் ரஜினி

    ரஜினிகாந்த் ஒவ்வொரு ஹோலி பண்டிகை அன்றும் தன்னை ரஜினியாக்கிய பாலச்சந்தரை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு தடவை தான் ஹோலி அன்று பாலசந்தரை சந்திக்கவில்லை.

    கோச்சடையானுக்காக வெயிட்டிங்

    கோச்சடையானுக்காக வெயிட்டிங்

    ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரின் கோச்சடையான் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கின்றனர். படம் வரும் ஜூலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Sivaji Rao Gaekwad became Rajinikanth on the day of Holi in the year 1975. Director K. Balachander christened Sivaji as Rajinikanth on that auspicious day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X