நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரணும்: கொந்தளிக்கும் பிரபலம்
மும்பை: காமக்கொடூர தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் போன்று பாலிவுட்டில் உள்ளவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலானி தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு தேடி வந்த பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாலிவுட்
ப்ரியங்கா சோப்ரா சொன்னது மிகச் சரியே. பாலிவுட்டிலும் ஹார்வி வெயின்ஸ்டீன்கள் உள்ளனர். வாய்ப்பு தேடி வருபவர்களை தங்களின் ஆசையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துகிறார்கள்.

உலகம்
சினிமாவில் முன்னேற போராடுபவர்களை தங்களின் ஆசையை தீர்க்க பயன்படுத்துபவர்களின் முகத்திரையை கிழித்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

வாய்ப்புகள்
சினிமாவில் பிரபலமாக சில விஷயங்களை செய்யும் நடிகைகளை பற்றி நான் பேசவில்லை. நடிக்க வாய்ப்பு கேட்டு வரும்போது படுக்கைக்கு அழைக்கப்படும் வளர்ந்து வரும் நடிகர்கள், நடிகைகளை பற்றி பேசுகிறேன்.

பெயர்கள்
பட வாய்ப்புக்காக கட்டாயப்படுத்தி படுக்கைக்கு வரவழைக்கும் நபர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்களின் முகத்திரையை கிழிக்க பாதிக்கப்பட்டவர்கள் முன்வர வேண்டும். பாலிவுட்டின் வெயின்ஸ்டீன்களின் முகத்திரையை கிழிக்கும் நேரம் வந்துவிட்டது என்று நிஹலானி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











