Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மன்னிக்கவே முடியாது.. மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் மரணிக்கும் அவலம்.. பிரபல நடிகை விளாசல்!
மும்பை: பாலிவுட் நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசை விளாசித் தள்ளி உள்ளார் நடிகை அமைரா தஸ்தூர்.
கடந்த ஆண்டே கொரோனா பாதிப்பை சந்தித்த நிலையில், உரிய மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் கொத்து கொத்தாக மடிவதை பார்க்க முடியவில்லை.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட… கர்ணன் பட வில்லன் !
மருத்துவத் துறையில் உரிய வளர்ச்சியை செய்யாமல் இந்த பேரிழப்பை கொடுத்துள்ள மத்திய அரசை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி இருக்கிறார்.

அனுபம் கெர் விமர்சனம்
மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்கும் பணியில் சறுக்கி விட்டதாக பிரபல பாலிவுட் நடிகரும் பாஜக ஆதரவாளருமான அனுபம் கெர் மத்திய அரசுக்கு எதிராக வைத்த விமர்சனம் நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. கங்கையில் மிதக்கும் சடலங்களை நாய்கள் தின்னும் அவலம் குறித்தும் அவர் சாடியிருந்தார்.

மன்னிக்கவே முடியாது
நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசின் மருத்துவ துறையின் அலட்சிய போக்கை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி உள்ளார். "It's Unforgivable" என கடுமையாக சாடியுள்ளார் அனேகன் படத்தின் நாயகி.

ஒரு வருடமாக
கடந்த ஆண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டோம், ஒரு வருடன் ஆன பின்னரும் இந்த ஆண்டு அதை விட கொடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். நாட்டு மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் நாள் தோறும் 4000 மக்கள் இறப்பதை அரசு எப்படித்தான் வேடிக்கை பார்க்கிறோதே என்ற கேள்வி எழுந்துள்ளது.

சரியான திட்டமிடலே இல்லை
நாட்டில் அனைவருக்கும் சரியான மருத்துவ வசதி என்றும், கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தப்பிக்க போதுமான மருத்துவ படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவமனைகள் கிடைக்காமலேயே பலரும் மரணித்து வருவதாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் துளியும் அக்கறை இல்லாமல் அரசு காட்டிய மெத்தன போக்கே இந்த நிலைமைக்கு காரணம். இதை ஒரு போதும் மன்னிக்கவே முடியாது என அவர் கூறியுள்ளார்.

மீண்டும் தமிழில்
பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் நடித்துள்ளார். தனுஷின் அனேகன் படத்தில் நடித்துள்ள இவர் மீண்டும் தற்போது பிரபுதேவாவின் பஹீரா படம் மூலம் தமிழுக்கு வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக மருத்துவ உதவிகளை செய்து வருகிறார் அமைரா தஸ்தூர்.