இது வேறையா.. விடாமுயற்சி படத்துக்கு வந்த சோதனை.. அஜித் vs மகிழ் திருமேனி லடாய்?

சென்னை: நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அர்ஜுன் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அஜித் மற்றும் அர்ஜுன் இடையிலான கார் சேஸிங் காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும் தன்னுடைய மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகவும் அஜித், லண்டனில் உள்ளார். இதே போல கேரள படத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவும் கொச்சியில் உள்ளார். இதனால் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த வாரத்தில் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது. இந்த சூட்டிங்கில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் அர்ஜூன் பங்கேற்ற சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக அஜித் -திரிஷா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

It seems Actor Ajith Angry on Vidaamuyarchi director

நடிகர் அஜித்: அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக துவங்கி தீபாவளி ரிலீஸ் ஆக வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டது. விடாமுயற்சி அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக சூட்டிங் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இயக்குநர் மகிழ்திருமேனி: ஆனால் படத்தின் சூட்டிங் கடந்த அக்டோபர் மாதத்தில் தான் துவங்கப்பட்டது. படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் படம் ஆக்ஷன் திரில்லராக உருவாக்கப்பட்டு வந்தது. படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பியது. மீண்டும் அசர்பைஜான் திரும்பிய படக்குழுவினர் கடந்த இரு வாரங்களாக படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கை நடத்தி வந்தனர். படத்தை விரைவில் முடிக்க விரும்பி இடைவெளி இல்லாமல் சூட்டிங்கை நடத்த அஜித் கேட்டுக் கொண்டிருந்தார்.

இடைவெளி விட்ட படக்குழு: இந்நிலையில் தற்போது புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாளை ஒட்டி நடிகர் அஜித் லண்டன் சென்றுள்ளார். சில தினங்களில் அவர் மீண்டும் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். இதே போல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் படத்திற்காக நாடு திரும்பிய நடிகை திரிஷாவும் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இணைகிறார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக அசர்பைஜானில் நடத்தப்பட்டு வருகிறது.

சூட்டிங்கை இழுத்தடிக்கும் இயக்குநர்: இருந்தபோதிலும் படத்தின் 50 சதவிகித சூட்டிங் மட்டுமே தற்போது நிறைவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங்கை மகிழ் திருமேனி இழுத்தடித்து வருவதாகவும் இது படத்தின் ஹீரோ அஜித்திற்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மகிழ்த்திருமேனி மற்றும் அஜித்துக்கு இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தனக்கு பிடித்தமான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவை படத்தில் இருந்து மகிழ் திருமேனி படத்திலிருந்து நீக்கியதும் அஜித்திற்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் விடுத்த கெடு: இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை பிப்ரவரி மாதத்திற்கு நிறைவு செய்ய திட்டமிட்டுள்ள அஜித், அடுத்ததாக ஆதிக் இயக்கத்தில் தன்னுடைய ஏகே63 படத்தில் இணைய திட்டமிட்டுள்ளார். இதனால் பிப்ரவரி மாதத்திற்கு விடாமுயற்சி படத்தை முடிக்க வேண்டும் என்றும் அவர் தயாரிப்பு தரப்பிடம் திட்டவட்டமாக கூறியுள்ளாராம். இதனால் படத்தை மகிழ் திருமேனி விரைவில் முடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X